இலங்கையில் துறைமுகங்கள் மூடப்பட்டன

இலங்கையில் துறைமுகங்கள் மூடப்பட்டன

1 mins read
7beec4ff-2345-4bc4-ace3-bae773830108
இலங்கை தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து குறைந்தது இரு மீன்பிடித் துறைமுகங்களையும் கடைகளையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  படம்: ராய்ட்டர்ஸ் -

இலங்கை தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து குறைந்தது இரு மீன்பிடித் துறைமுகங்களையும் கடைகளையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்நாட்டின் பிரதான மீன் சந்தையுடன் தொடர்பில் 609 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடுத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கொழும்பின் ஒரு சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவையும் அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது.

இலங்கையில் அதிக மக்கள்தொகை கொண்ட மேற்குப் பகுதியில் குறைந்தது 11 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மீன் சந்தையில் 49 ஊழியர்களுக்குத் தொற்று உறுதியானதையடுத்து அந்த மீன் சந்தையைத் தற்காலிகமாக மூட அதிகாரிகள் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் இன்றைய நிலவரப்படி, அந்தச் சந்தையுடன் தொடர்பிலான தொற்று 609 ஆக உயர்ந்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்