மலேசியாவில் அவசரநிலை நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன நிகழும்?

மலேசியாவில் அவசரநிலை நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன நிகழும்?

1 mins read
0b3b35ff-2c59-4f5b-933a-2dd144399fa0
படம்: இபிஏ -

நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த மாமன்னரின் அனுமதி வேண்டி மத்திய அரசு காத்திருக்கிறது.

மலேசியாவில் அவசரநிலை நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்? மலேசிய நாடாளுமன்றம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதுடன் இடைக்கால மற்றும் பொதுத் தேர்தல் தள்ளிவைக்கப்படும். வழக்கமானதல்லாத கொள்கைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடைக்கும்.

அவசரநிலையை யார் அறிவிப்பது? பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில், அவசர நிலை ஏற்பட்டிருப்பதாக மாமன்னர் திருப்தியடைந்த பிறகு அவசரநிலை அறிவிக்கப்படலாம். நாட்டின் பாதுகாப்பு, பொருளியல், பொது ஒழுங்கு போன்றவற்றுக்கு அச்சுறுத்தல் நிலவும்போது அவசரநிலை அறிவிக்கப்படலாம்.

இந்த அவசரநிலை எவ்வாறு நடைமுறையில் இருக்கும்? நாட்டின் அரசியலில் ஏற்படும் மாற்றங்களால் கொவிட்-19 கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் செலவு செய்வதற்கு குந்தகம் நேராமல் இருக்கும் பொருட்டு பிரதமர் முகைதீன் யாசின் கோரும் "பொருளியல் அவசரநிலை" உறுதிப்படுத்தும். சாலைகளில் பாதுகாப்புக்காக ராணுவம் நிறுத்தப்படாது. வர்த்தகங்களை மக்கள் வழக்கம்போல் செயல்படுத்தலாம்.

இப்போது "பொருளியல் அவசரநிலை" நடைமுறைப்படுத்தப்பட்டால், அது, 1969ஆம் ஆண்டில் நிகழ்ந்த இனக்கலவரத்தின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரநிலையிலிருந்து மாறுபட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்