புருணை இளவரசர் அஸ்மான் 38 வயதில் காலமானார்

புருணை இளவரசர் அஸ்மான் 38 வயதில் காலமானார்

1 mins read
15b566bd-667d-48bc-8677-9c04da83f3eb
இளவரசரின் மரணத்துக்கான காரணம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. படம்: BORNEO BULLETIN/FACEBOOK -
multi-img1 of 2

புருணை சுல்தானின் மகன்களில் ஒருவரான இளவரசர் 'அப்துல்' அஸிம் நேற்று (அக்டோபர் 24) காலமானார். அவருக்கு வயது 38.

புருணையின் அரசாங்க வானொலி, தொலைக்காட்சி, செய்தி ஊடகம் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

"சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் மகன் இளவரசர் ஹாஜி 'அப்துல்' அஸிம் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10.08க்கு உயிரிழந்தார்," என்று அந்த அறிவிப்பு குறிப்பிட்டது.

அவரது மரணத்துக்கான காரணம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

இளவரசர் 'அப்துல்' அஸிம் சுல்தானின் இரண்டாவது பிள்ளை.

இளவரசர் 'அப்துல்' அஸிம் சில நாட்களாக மருத்துவமனையில் இருந்ததாக செய்தித் தகவல்கள் குறிப்பிட்டன. புருணையில் ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1982ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி பிறந்த இளவரசர் 'அப்துல்' அஸிம், புருணை அனைத்துலகப் பள்ளி, சிங்கப்பூரின் ராபிள்ஸ் கல்விக்கழகம், ஆக்ஸ்ஃபோர்டு புரூக்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றவர்.

இளவரசரின் மறைவுக்கு சிங்கப்பூர் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துக்கொண்டனர். அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்களது இரங்கல் செய்திகளை புருணை சுல்தானுக்கு தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்