ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கியதால் ஆடவர் படுகாயம்

1 mins read
68d1b1be-0f4a-4eb1-95c1-e10eeae3866b
ஆஸ்திரேலியாவின் 'கிரேட் பேரியர் ரீஃப்' கடல் பகுதியில் 59 வயது ஆடவரை ஒரு சுறா மீன் தாக்கியது.  படம்: ஏஎஃப்பி -

ஆஸ்திரேலியாவின் 'கிரேட் பேரியர் ரீஃப்' கடல் பகுதியில் 59 வயது ஆடவரை ஒரு சுறா மீன் தாக்கியது.

ஈட்டியைக் கொண்டு மீன்பிடித்துக்கொண்டிருந்த அந்த ஆடவரை இன்று பகல்வேளையில் அந்த சுறா தாக்கியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

ஆடவரின் தொடைப் பகுதியில் பெரிய சுறா மீன் கடி தென்பட்டதாக ஒரு மருத்துவர் கூறியிருந்தார்.

ஆடவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை நடப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவில் உயிரைக் கொல்லும் ஏழு சுறா மீன் தாக்குதல்கள் நடந்துவிட்டன.

குறிப்புச் சொற்கள்