அதிவேகக் கிருமிப் பரவலை கட்டுப்படுத்தும் போரில் நாடுகள்

பாரிஸ்: உல­கின் பல பகு­தி­களில் புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­வே­க­மா­கப் பதி­வாகி வரு­கிறது. இத­னால் கொவிட்-19 கிரு­மியை முறி­ய­டிக்­கும் நட­வ­டிக்­கை­களில் பல நாடு­கள் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளன. ஊர­டங்கை நீட்­டித்­தது பிரான்ஸ். பெல்­ஜி­யம் அதன் சொந்­தக் கட்­டுப்­பா­டு­களைக் குறிப்­பிட்ட நாளுக்கு முன்­னரே கொண்டு வந்­தது.

இந்த அதி­வே­கத் தொற்­றுப் பர­வல் குறித்து வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று உல­கச் சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்­தி­ருந்­தது. இத­னால் இரண்­டா­வது கிருமி அலை­யைச் சமாளிக்­கும் சுகா­தார அமைப்­பு­க­ளின் ஆற்­றல் பாதிக்­கப்­படும் என்­றும் இவ்­வாண்­டின் முன்­பா­தி­யில் கிரு­மி­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருந்த நாடு­க­ளுக்கு இனி சவால்­கள் காத்­தி­ருக்­கின்­றன என்­றும் நிறு­வ­னம் சுட்­டி­யது.

வீழ்ந்த பொரு­ளி­யலை மீட்­டெ­டுக்­கும் அதே வேளை­யில் புதிய கட்­டுப்­பா­டு­கள் விதித்து இரண்­டுக்­கும் சம­நிலை காண அர­சாங்­கங்­கள் திண­று­கின்­றன. இருப்­பி­னும், தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யும் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யும் மக்­களை வாட்டி எடுத்­து­விட்­டது. இத­னால் புதிய கட்­டுப்­பா­டு­க­ளால் அவர்­கள் எரிச்­ச­ல­டைந்­துள்­ள­னர்.

புதிய தொற்று சம்­ப­வங்­கள் அதி­கம் பதி­வாகி வரும் ஐரோப்­பிய நாடு­ளில் மீண்­டும் நாட­ள­விலான முடக்­க­நிலை அறி­விப்­பதைத் தவிர்த்து வரு­கின்­றன அர­சாங்­கங்­கள். அதற்­குப் பதி­லாக இர­வு­நேர ஊர­டங்­கு­, சமூக ஒன்று­கூ­டல்­களில் கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள் போன்ற நட­வ­டிக்­கை­க­ளைக் கொண்டு வரு­கின்­றன.

ஜெர்­ம­னி­யில் 10,000வது கொரோனா கிருமி உயி­ரி­ழப்பு பதி­வா­னதை அடுத்து, அந்­நாட்­டின் தலை­வர் ஏஞ்­சலா மெர்க்­கல், “தொடர்­பு­க­ளைக் குறைத்­துக்­கொள்­வதே இலக்கு, குறை­வான நபர்­க­ளைச் சந்­திப்­பதே சிறப்பு,” என்­றார்.

போலந்து அதி­பர் எண்ட்­ரெ­ஸெஜ் டுடா, தாமும் கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டு­ள்ளதாக நேற்று முன்­தி­னம் அறி­வித்­தார். போலந்­தி­லும் இதற்கு முன் இராத அள­வில் தொற்று விகி­தம் பதி­வாகி வரு­கிறது.

ஸ்பெ­யி­னில் சென்ற வாரத் தொடக்­கத்­தில் ஒரு மில்­லி­யன் கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கி­ன. நாட­ள­வில் அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­ப­டு­வ­தற்­கும் ஊர­டங்கு நட­வ­டிக்­கை­க­ளுக்­கும், மேலும் புதிய கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­க­ளுக்­கும், நாடே தயா­ராகி வரு­கிறது.

ஒரு மில்­லி­யன் கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வா­கிய மிக அண்­மைய நாடாக கொலம்­பியா உள்­ளது. அதே மைல்­கல்­லைத் தாண்­டிய பிரான்­சில் 24 மணி நேரத்­தில் 45,000க்கும் மேற்­பட்ட தொற்று சம்­ப­வங்­கள் உறு­தி­செய்­யப்­பட்­டன. இரவுப் பொழு­தில் ஊரடங்கை பிரெஞ்சு அர­சாங்­கம் சுமார் 46 மில்­லி­யன் மக்­க­ளுக்கு விரி­வு­ப­டுத்­தி­யது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!