ஆய்வு: தாய்லாந்து ஆர்ப்பாட்டங்களுக்கு பிரதமர் மீதான அதிருப்தியே காரணம்

பேங்­காக்: தாய்­லாந்து பிர­த­மர் பிர­யுத் சான்-ஒ-சானின் செயல்­பா­டு­கள் குறித்து பொது­மக்­க­ளி­டையே அதி­க­ரித்து வரும் அதி­ருப்­தியே, ஆர்ப்­பாட்­டங்­கள் தீவி­ர­ம­டை­யக் கார­ண­மாக உள்­ள­தென ஆய்வு ஒன்று கூறு­கிறது.

சுவான் டுசிட் பல்­க­லைக்­க­ழ­கம் அக்­டோ­பர் 19 முதல் 22ஆம் தேதி­வரை மேற்­கொண்ட இந்த ஆய்­வில் 5,738 பேர் பங்­கேற்­ற­னர்.

தாய்­லாந்து அர­சாங்­கத்­துக்கு எதி­ராக வெடித்­துள்ள அண்­மைய ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு திரு பிர­யுத் பற்றி மக்­கள் கொண்­டுள்ள மனக்­கு­முறலே கார­ணம் என்று ஆய்­வில் பங்­கேற்ற 62 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கூறி­யி­ருந்­த­னர். மேலும் அதிக ஜன­நா­யக உரி­மைக்­கா­க­வும் தாய்­லாந்­தில் நிலவி வரும் “சர்­வா­தி­கா­ரம்” ஒரு முடி­வுக்கு வர வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் குரல்­கொ­டுப்­ப­தாக சுமார் 50 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

முன்­னாள் ராணு­வத் தலை­வ­ராக இருந்த திரு பிர­யுத், 2014ஆம் ஆண்­டில் நடந்த ஆட்­சிக்­க­விழ்ப்­பில் ஆட்­சியைக் கைப்­பற்­றி­னார்.

பின்­னர், 2019ஆம் ஆண்டு தேர்­த­லில் பிர­த­ம­ரா­கத் தேர்வானார். தம் ஆத­ர­வா­ளர்­க­ளி­டம் நேற்று முன்­தி­னம் பேசிய திரு பிர­யுத், “நான் பதவி வில­க­மாட்­டேன்,” என்று உறு­தி­ய­ளித்­தார்.

அந்­நாட்­டின் தேசிய வளர்ச்சி நிர்­வா­கக் கழ­கம் நடத்­திய மற்­றோர் ஆய்­வில், ஆர்ப்­பாட்­டங்­கள் வன்­மு­றைக்­கும் மோத­லுக்­கும் வழி விடக்­கூ­டும் என்று அஞ்­சு­வ­தாக பங்­கேற்ற 1,336 பேரில் 59 விழுக்­காட்­டி­னர் கூறி­யி­ருந்­த­னர். இன்­றும் பேங்­காக் நக­ரில் ஆர்ப்­பாட்­டங்­கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon