சுடச் சுடச் செய்திகள்

சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட மக்களை வலியுறுத்துகிறது கொரியா

சோல்: கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்களை வலியுறுத்தி வருகிறது தென்கொரியா. அங்கு சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 48 பேர் மாண்டனர். அதனையடுத்து தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 இருந்தும் தென்கொரியா, கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த மாதம் 5 மில்லியன் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசி தேவையான வெப்பநிலையில் பாதுகாக்கப்படாமல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து இந்த ஊசி பாதுகாப்பான என மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் மரணச் சம்பவங்களுக்கும் இந்தத் தடுப்பூசிக்கும் எவ்விதத் தொடர்பும் அறியப்படவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது. தென்கொரியாவில் சளிக்காய்ச்சலுக்கு மட்டும் ஆண்டுதோறும் 3,000 பேர் மரணமடைகின்றனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon