நீதிபதி நியமனத்தில் டிரம்ப்புக்கு வெற்றி

அமெ­ரிக்­கா­வில் அதி­பர் தேர்­த­லுக்கு இன்­னும் ஒரு வாரமே உள்ள நிலை­யில் உச்ச நீதி­மன்ற நீதி­பதி பத­விக்கு அதி­பர் டிரம்ப் நிய­மித்த எமி கோனி பாரெட்­டுக்கு செனட் சபை ஒப்­பு­தல் அளித்­தது.

திரு டிரம்ப்­பின் குடி­ய­ர­சுக் கட்­சி­யி­னர் ஆதிக்­கம் செலுத்­தும் செனட் சபை­யில் 52-48 என்ற வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் ஏமி கோனி நிய­ம­னத்­துக்கு ஒப்­பு­தல் வழங்கப்பட்டது.

இதை­ய­டுத்து 48 வயது பாரெட் வெள்ளை மாளி­கை­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் டிரம்ப் முன்­னி­லை­யில் பொறுப்பு ஏற்­றுக் கொண்­டார்.

சென்ற 18ஆம் தேதி உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­யான ரூத் பேடர் உடல் ­ந­லக் குறைவு ஏற்பட்டு கால­மா­னார்.

இத­னால் காலி­யான இடத்தை நிரப்­பும் முயற்­சி­யாக மேல் முறை­யீட்டு நீதி­ப­தி­யான எமி கோனி பாரெட்டை டிரம்ப் அப்பதவிக்கு நியமித்தார்.

இதற்கு முன்பு டிரம்ப்­பின் குடி யர­சுக் கட்­சி­யைச் சேர்ந்த இரண்டு அதி­பர்­கள் தலா ஒரு முறை உச்ச நீதி­மன்ற நீதி­ப­தியை நிய­மித்து உள்­ள­னர்.

2017ல் நீல் கோர் சச்­சும் 2018ல் பிரெட் கேவன்­னா­கும் நீதி­ப­தி­களாக நிய­மிக்­கப்­பட்­ட­னர்.

பென்­சில்­வே­னியாவில் நடந்த தேர்­தல் பிர­சா­ரத்தை முடித்­துக் கொண்டு வெள்ளை மாளி­கைக்­குத் திரும்­பிய அதி­பர் டோனல்ட் டிரம்ப், திங்­கள் இரவு நடந்த பத­வி ­யேற்பு நிகழ்ச்­சி­யில் பங்கேற்றார்.

அப்­போது பேசிய திரு டிரம்ப், “அமெ­ரிக்­கா­வின் பார­பட்­ச­மற்ற சட்ட வர­லாற்­றில் முக்­கிய தரு­ணம் இது,” என்­றார்.

“பாரெட் மிக­வும் திற­மை­யான சட்ட கல்­வி­மான், நமது நாட்­டின் உச்ச நீதித்துறை­யில் அவர் சிறப்­பாக பணி­யாற்­று­வார்,” என்று அவர் குறிப்­பிட்­டார்.

உச்ச நீதி­மன்­றத்­தின் மற்­றொரு நீதி­ப­தி­யான கிளா­ரன்ஸ் தாமஸ், பாரெட்­டுக்கு பதவிப் பிர­மா­ணம் செய்து வைத்­தார்.

பின்­னர் பேசிய பாரெட், நாடாளு­ மன்­றம் அதி­பர் ஆகி­ய­வற்­றுக்கு அப்­பாற்­பட்­ட­வர்­ நீதி­பதி,” என்­றார்.

நீதி­பதி பொறுப்­புக்கு பாரெட் பெயரை அதி­பர் டிரம்ப் அறி­வித்­த­போது ஜன­நா­ய­கக் கட்­சி­யி­னர் கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

முக்­கிய பொறுப்­பு­க­ளுக்கு தேர்­தல் முடிந்­த­பி­றகே நிய­ம­னம் செய்ய வேண்­டும் என்று அவர்­கள் வலி­யு­றுத்தி­னர்.

ஆனால் இந்த எதிர்ப்­பை­யெல்­லாம் மீறி பாரெட் நீதி­ப­தி­யா­கி­யிருப்­ பது தேர்­த­லுக்கு முன்பு டிரம்­புக்கு கிடைத்த வெற்­றி­யா­கக் கரு­தப்­ப­டு­ கிறது.

அமெ­ரிக்­கா­வில் உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­யாக இருப்­ப­வர், இறக்­கும் வரை பத­வி­யில் நீடிக்க முடி­யும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon