அமெரிக்க தூதரகம் அருகே இளையர் கைது

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் தேசிய பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் அமெ­ரிக்க தூத­க­ரத்­துக்கு அருகே காணப்­பட்ட ஜன­நா­யக ஆத­ரவு இளை­யரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

தூத­க­ரத்­துக்கு எதிரே உள்ள காப்­பிக் கடை­யி­லி­ருந்து அடை­யா­ளம் தெரியாத நபர்­கள் இளை­யரை அழைத்­துச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

புதிய தேசிய பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் 19 வயது டோனி சுங்கை போலி­சார் கைது செய்­துள்­ளதை சவுத் சைனா மார்­னிங் போஸ்ட் உறுதிப்படுத்தியது.

புதிய சட்­டம் அமல்­ப­டுத்­து­வதற்கு முன்பு ஜன­நா­யக ஆத­ரவு குழு­வு­டன் சுங் சேர்ந்து செயல்­பட்­டார். அந்­தக் குழு வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் இளை­யரை காணவில்லை எனத் தெரிவிக்கப் பட்டது. மேலும் இரு உறுப்­பி­னர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அது கூறியது.

‘ஹாங்­காங்­கின் நண்­பர்­கள்’ என்ற பெய­ரில் இந்தக் குழு செயல்­பட்டு வந்தது.

“அமெ­ரிக்க தூத­ர­கத்­துக்­குள் இளை­யர் நுழைய வேண்­டும் என்­பதே எங்­க­ளு­டைய திட்­ட­மாக இருந்­தது,” என்று பெயர் தெரி­விக்க விரும்­பாத குழு உறுப்­பி­னர் ஒரு­வர் கூறி­னார். சுங் அக­தி­யாக விண்­ணப்­பிக்க முயற்சி செய்­த­தா­க­வும் குழு­வி­னர் குறிப்பிட்டனர்.

இதற்­கி­டையே ஹாங்­காங்­கில் சில­ருக்கு கொவிட்-19 சோத­னையை கட்­டா­ய­மாக்­கும் புதிய சட்­டம் இயற்­றப்­படவிருக்கிறது.

இதற்­கான நகல் சட்­டம் தயா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக ஹாங்­காங்­கின் தலைமை நிர்­வாகி கேரி லாம் தெரி­வித்­தார். கிரு­மித்தொற்­றால் பாதிக்­கக் ­கூ­டிய ஆபத்து உள்­ள­வர்­க­ளுக்கு புதிய சட்­டம் சோத­னையை கட்டாய­மாக்­கும் என்று அவர் கூறி­னார்.

மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!