‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்

38 வயதில் உயிரிழந்த புருணை இளவரசர் ‘அப்துல் ‘அஸிம் ‘ஆட்டோஇம்யூன்’ எனும் நோயால் பல முக்கிய உடலுறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக காலமானதாக அவரது இளைய சகோதரர் நேற்று (அக்டோபர் 27) தெரிவித்தார்.

இளவரசர் ‘அப்துல் மடீன் தமது சகோதரருக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் ரத்த நாளங்களின் அழற்சி வகையைச் சார்ந்த, கடுமையான உடலமைப்பு முழுதும் சார்ந்த நாள அழற்சி (systemic vasculitis) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதே காலகட்டத்தில் அவருக்கு இருமுனைக்கோடி மனக்குழப்பப் பிரச்சினையும் இருந்ததால் நோய்க்கு எதிரான அவரது போர் மிகக் கடுமையாக இருந்தது என்று இளவரசர் ‘அப்துல் மடீன் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆட்டோஇம்யூன்’ நோயால் தொடர்ந்து ஏற்பட்ட தொற்றுகளால் உடலுறுப்புகள் செயலிழந்து இளவரசர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இளவரசர் ‘அப்துல் ‘அஸிம், 38, காலமானார். அரச கல்லறையில் அதே நாளில் அவருக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

ஏழு நாட்களுக்கு புருணையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இளவரசரின் மரணத்துக்கான காரணம் குறித்த தகவல்களை 29 வயதான அவரது இளைய சகோதரர் ‘அப்துல் மடீன் தெரிவித்திருந்தார். இவ்வாறு தெரிவிப்பதையே தமது சகோதரரும் விரும்பியிருப்பார் என இளைய இளவரசர் குறிப்பிட்டிருந்தார்.

தமது சகோதரருக்கான அஞ்சலி செய்தியில், “அவர் உடனிருந்தால் ஒருபொழுதும் பொலிவிழந்து இருக்காது; அவர் வாழ்க்கையை கடுமையானதாக எடுத்துக்கொண்டதில்லை; அவர் இருக்கும் இடம் சிரிப்பால் நிறைந்திருக்கும்; அவர் தம் வாழ்வை முழுமையாக வாழ்ந்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“என்னை உருவாக்கியதில் அவருக்கு பெரும்பங்கு உண்டு; அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரச பதவிக்கான வரிசையில் நான்காவது நிலையில் இருந்த இளவரசர் ‘அப்துல் ‘அஸிம், புருணை அரசர் சுல்தான் ஹசனல் போலிகியாவுக்குப் பிறந்த இரண்டாவது இளவரசர்.

பண்டார் ஸ்ரீ பகவானில் 1982ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி பிறந்த அவர், புருணை அனைத்துலகப் பள்ளி, சிங்கப்பூரில் ராபிள்ஸ் கல்விக்கழகம், ஆக்ஸ்ஃபோர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றார்.

லண்டனை அடிப்படையாகக் கொண்ட டேரைல் பிரின்ஸ் புரொடக்‌ஷன்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்ததாக என்பிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியான You’re Not You, 2018ஆம் ஆண்டில் வெளியான The Happy Prince ஆகிய திரைப்படங்களை அஸிம் போல்கியா என்ற பெயரில் அவர் தயாரித்ததாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!