‘தாய்லாந்து பிரதமர் பதவி விலகினாலும் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’

பேங்­காக்: தாய்­லாந்­தில் போராட்­டங்­கள் தீவி­ர­ம­டை­யும் நிலை­யில் பிர­த­மர் பிர­யுத் சான் ஓ சாவின் அதி­கா­ரம் நாளுக்கு நாள் வலு­விழந்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதன் தொடர்­பில் பேங்­காக்­கி­லுள்ள சுவான் துசிட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் 62 விழுக்­காட்­டி­னர் நாட்­டில் அண்­மை­ய­கா­ல­மாக நடை­பெ­றும் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு பிர­த­மர் பிர­யுத் மீதான அதி­ருப்­தியே கார­ணம் என்று தெரி­வித்­துள்­ள­னர்.

திரு பிர­யுத் கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக பிர­த­ம­ராக பதவி வகித்து வரு­கி­றார். இவர் முத­லில் 2014ஆம் ஆண்டு ராணு­வப் புரட்­சி­யின் மூலம் பத­விக்கு வந்­தார். பின்­னர், சென்ற ஆண்டு தனது ராணுவ ஆட்சி மன்­றம் வரைந்த அர­சி­யல் சாச­னப்­படி நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் வென்று மீண்­டும் ஆட்­சி­யில் அமர்ந்­தார்.

நாட்­டில் போராட்­டக்­கா­ரர்­கள் அவர் பதவி விலக வேண்­டு­மென்று பல முறை கோரிக்கை விடுத்­தும், பல முறை கெடு விதித்­தும், இது­வரை பிர­த­மர் பிர­யுத் பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து விலக மறுத்து வரு­கி­றார். தாய்­லாந்­தில் ஆர்ப்­பாட்­டங்­கள் குறித்து விவா­திக்க நாடா­ளு­மன்­றத்­தின் சிறப்­புக் கூட்­டத்­தில் பேசிய திரு பிர­யுத், எதிர்­வ­ரும் நவம்­பர் மாதம் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்ட அர­சி­யல் சாச­னத்தை திருத்­தும் பணி மீண்­டும் தொட­ரும் என்­றார்.

அப்­பொ­ழுது பேசிய அவர், மன்ற உறுப்­பி­னர்­கள் நாட்­டில் என்ன நடந்­தது என்­பதை மறந்து பேசு­வ­தாக குற்­றம் சாட்­டி­னார்.

“2014ஆம் ஆண்டு நான் பதவி ஏற்­றி­ருக்­கா­வி­டில் என்ன நடந்­தி­ருக்­கும் என்று யோசித்­துப் பாருங்­கள்,” என்று கூறிய பிர­த­மர், “நாட்­டில் கல­வர சூழல் இருந்­ததை சிந்­தித்­துப் பாருங்­கள். நான் பதவி ஏற்­கு­முன் நாட்­டில் நடந்­ததை எல்­லாம் மறந்­து­விட்­டீர்­களா? நாட்­டில் நில­விய குழப்­பம், ஊழல் எல்­லாம் மறந்­து­விட்­டதா? என்று மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பார்த்து அவர் ஆவே­ச­மா­கக் கேள்­விக்கணை தொடுத்தாக புளூம்­பெர்க் செய்­தித் தக­வல் ஒன்று கூறு­கிறது.

திரு பிர­யுத் பதவி வில­கி­னா­லும் ஆர்ப்­பாட்­டங்­க­ளைக் கைவி­டப் போவ­தில்லை என போராட்­டக்­கா­ரர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர். அவர்­கள் மன்­ன­ரைச் சுற்­றி­யுள்ள ஆலோ­ச­கர்­க­ளின் கைவண்­ணத்­தில் உரு­வா­கி­யுள்ள அர­சி­யல் சாச­னத்­துக்குப் பதி­லாக புதிய சாச­னம் ஒன்று வேண்­டு­மென கோரி வரு­கின்­ற­னர். இதன்­படி, அவர்­கள் ஜன­நா­யக அடிப்­ப­டை­யில் உரு­வான வேறோர் அர­சி­யல் சாச­னம் வேண்­டும் என்­றும் அதில் மன்­னர் மகா வஜ்­ர­லோங்­கோர்­­னின் பொறுப்­பு­களும் வரை­ய­றுக்­கப்­பட வேண்­டும் என்றும் கோரி வரு­கின்­ற­னர்.

தங்­க­ளது கோரிக்­கை­கள் நிறை­வே­றும் வரை போராட்­டம் தொட­ரும் என போராட்­டத் தலை­வர்­களில் முக்­கி­ய­மான ஒரு­வ­ரான ஜத்­து­பாட் என்­ப­வர் கூறி­ய­தாக செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன.

“பிர­யுத் பதவி வில­கி­னா­லும் அவ­ரைப் போல் வேறொ­ரு­வர் வரு­வார். பின்­னர், இதே பிரச்­சி­னை­கள் மீண்­டும் தலை­தூக்­கும். எனவே, அர­சாங்­கத்­தில் மாறு­தல்­கள், புதிய அர­சி­யல் சாச­னம், மன்­னர் தொடர்­பான மாற்­றங்­கள் என அனைத்­தும் ஒரே சம­யத்­தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்,” என்று ஜத்­து­பாட் விளக்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!