பெல்ஜியத்தில் புதிய முடக்கநிலை

பெல்­ஜி­யம் நாட்­டில் கொரோனா நோய்த்­தொற்று கட்­டுக்­க­டங்கா நிலை­யில் உச்­சத்தை எட்­டி­யுள்­ளது. அத­னை­ய­டுத்து அந்­நாட்­டில் புதிய முடக்­க­நி­லையை அறி­விப்­பது குறித்து அர­சாங்­கம் இன்று நடக்­க­வி­ருக்­கும் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­க­வுள்­ளது. 11 மில்­லி­யன் மக்­கள் தொகை­யைக் கொண்­டுள்ள இந்த நாட்­டில் கடந்த இரண்டு வாரங்­களில் மட்­டும் 100,000 பேரில் 1,390 பேர் நோய்த்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான நோய்த்­த­டுப்பு மற்­றும் கட்­டுப்­பாட்டு நிலை­யத்­தின் தர­வு­க­ளின் பதிவு இதைக் காட்­டு­கிறது.

பெல்­ஜி­யத்­திற்கு அடுத்­த­ப­டி­யாக செக் குடி­ய­ர­சில் 100,000 பேரில் 1,370 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­நி­லை­யில் சில ஐரோப்­பிய நாடு­களில் குளிர்­காலம் தொடங்­கி­விட்­டது. ஆகை­யால், நோய்த்­தொற்­றின் இரண்­டா­வது அலை­யால் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­படும் அபா­யம் உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பெல்­ஜி­யத்­தில் அக்­டோ­பர் 20ஆம் தேதி மட்­டும் 18,000க்கும் மேலா­னோர் நோய்த்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். இது அதற்கு முந்­தைய உச்ச எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் பத்து மடங்கு அதி­கம் என்று கூறப்­ப­டு­கிறது. அத்­து­டன் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­ப­டுப­வர்­க­ளின் எண்­ணிக்கை எட்டு நாட்­க­ளுக்கு ஒரு முறை இரட்­டிப்­பா­கிக்கொண்டே உள்­ளது. கடந்த திங்­கட்­கி­ழமை நில­வ­ரப்­படி அங்கு 809 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வி­லும் 5,260 பேர் மருத்­து­வ­மனை­களில் கொவிட்-19 வார்­டு­க­ளி­லும் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

பெல்­ஜி­யத்­தின் வெளி­யு­றவு அமைச்­ச­ரும் முன்­னாள் பிர­த­ம­ரு­மான சோஃபி வில்ம்ஸ் கொவிட்-19 நோய்த்­தொற்­றால் கடந்த வாரம் பாதிக்­கப்­பட்­டார். இப்­போது அவர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­மதிக்­கப்­பட்­டுள்­ளார்.

பெல்­ஜி­யத்­தின் லீஜ் நக­ரில்­தான் புதிய தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது என்று மருத்­து­வ­மனை ஒன்று கூறி­யது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon