நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் போராட்டம்

வியட்­னா­மில் வீசிய மொலாவி புயல்­காற்­றால் நாட்­டின் மத்­திய பகு­தி­யில் கன­மழை பெய்து வரு­கிறது. அத­னை­ய­டுத்து வெள்­ளப் பெருக்­கும் நிலச்­ச­ரி­வும் ஏற்­பட்­டுள்­ளது. 31 பேரை பலி­வாங்­கிய நிலச்­ச­ரி­வில் மேலும் பலர் சிக்­கி­யி­ருக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­படு­கிறது. அவர்­க­ளைத் தேடி மீட்­கும் பணி­யில் ராணுவ வீரர்­கள் ஈடு­படுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த சில வாரங்­க­ளாக வியட்­னா­மில் பெய்து வரும் மழை­யால் குறைந்­தது 160 பேர் மாண்­டு­விட்­ட­னர். கடந்த பத்தாண்டுகளில் அங்கு வீசிய புயல்களில் இதுவே மிக சக்திவாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

குவாங்நாம் மாநி­லத்­தி­லுள்ள பல பகு­தி­கள் தொடர்பு துண்­டிக்­கப்­பட்ட நிலை­யில் உள்ளன. அப்­பகு­தி­களில் மட்­டும் 19 பேர் நிலச்­சரி­வில் சிக்கி மாண்­ட­னர். 48 பேரைக் காண­வில்லை. பலத்த புயல் காற்று வீசி ஓய்ந்த பின் ஏற்பட்டுள்ள மோச­மான பரு­வ­நிலை கார­ண­மாக தேடி மீட்­கும் பணிக்கு இடை­யூறு ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் கட­லுக்கு மீன்­பிடிக்­கச் சென்­ற­வர்­க­ளைத் தேடி மீட்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த கடற்­ப­டை­யி­னர் 12 உடல்­களை மீட்­ட­னர். மேலும் 14 மீன­வர்­க­ளைக் காண­வில்லை. இரண்டு நாட்­க­ளுக்கு முன் அந்த மீன­வர்­கள் சென்ற படகு கட­லில் மூழ்­கி­யதை அடுத்து அவர்­களைத் தேடி மீட்­கும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டது.

இது­வ­ரை­யி­லும் குறைந்­தது 160 பேர் மாண்­டி­ருக்­கக்­கூ­டும் என்­றும் ஏரா­ள­மா­னோ­ரைக் காண­வில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது. இவர்­களில் பெரும்­பா­லா­னோர் நிலச்­ச­ரி­வில் சிக்­கி­யி­ருக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

அக்­டோ­பர் மாதத் தொடக்­கத்­தில் இருந்தே வியட்­னாம் புய­லா­லும் கன­ம­ழை­யா­லும் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

“புய­லும் மழை­யும் எப்­போது வரும் என்று எங்­க­ளால் கணித்­து­விட முடி­யும். ஆனால் நிலச்­ச­ரிவு எப்­போது எங்கு வரும் என்று எங்­க­ளால் கணிக்க முடி­ய­வில்லை,” என்று வியட்­னாமிய துணைப் பிர­த­மர் ட்ரின் டின் டுங் ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார். நிலச்­ச­ரிவு ஏற்­பட்­ட இடங்­க­ளுக்கு மீட்­புப் பணி­யி­னர் விரை­வில் சென்­ற­டைய முடி­யா­த­வாறு சாலை­கள் மண்­ணில் புதைந்­தும் குப்பை கூளங்­க­ளால் மூடப்­பட்­டும் சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளன. இருப்­பி­னும் மீட்பு நட­வ­டிக்­கை­களை விரைவுபடுத்த உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்று துணைப் பிர­த­மர் டின் டுங் கூறி­யுள்­ளார்.

வியட்­னா­மின் மத்­திய வட்­டா­ரத்­தில் கடந்த சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி, 56,000 பேர் வீடு­களை இழந்து தவிப்­ப­தோடு மில்­லி­யன் கணக்­கா­னோர் மின்­சா­ர­மின்றி இரு­ளில் செய்­வ­த­றி­யாது தவிக்­கும் நிலை ஏற்­பட்­ட­தாக அந்த நாட்­டின் விடிவி தொலைக்­காட்சி தெரி­வித்­தது. புயல்­காற்றால் கன­ம­ழை­யும் அவற்­றைத் தொடர்ந்து ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கும் சில வாரங்­க­ளாக மில்­லி­யன் கணக்­கான மக்­களை துய­ரு­றச் செய்­துள்­ளது. மக்­கள் வீடு­களை இழந்து தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவ நிவா­ர­ணப் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

வியட்­னா­மைத் தாக்­கி­ய மொலாவி புயல் கடந்­த­ வா­ர இறுதியில் பிலிப்­பீன்­சை­யும் தாக்­கி­யது. அதைத் தொடர்ந்து அங்கு பெய்த கன­ம­ழை­யா­லும் நிலச்­ச­ரி­வா­லும் குறைந்­தது 16 பேர் மாண்­டு­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!