அம்னோ: மலேசியாவில் கொவிட்-19க்குப் பிறகு தேர்தல்

அம்னோ: மலேசியாவில் கொவிட்-19க்குப் பிறகு தேர்தல்

1 mins read
3d5fd6f0-8ce8-4264-bfec-56a1dd389d9c
படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவின் ஆளும் தேசிய கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் ஆகப்பெரிய கட்சியான அம்னோ, நாட்டில் கொவிட்-19 ஒடுங்கிய பிறகு பொதுத் தேர்தலை நடத்தலாம் என்று தெரிவித்து இருக்கிறது.

அம்னோ தலைவர்கள் வியாழக்கிழமை நீண்ட நேரம் அரசியல் நிலவரங்களை விவாதித்தனர். அதற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. இந்த வாரத்தில் இரண்டு முறை அம்னோ கூடி நிலவரங்களை விவாதித்தது.

துணைப் பிரதமராக ஒருவரை அம்னோ பரிந்துரைக்கும் என்று யூகச் செய்திகள் வலம் வந்தன. ஆனால் அப்படி எந்தவொரு கோரிக்கையையும் அம்னோ வைக்கவில்லை.