'ஜேம்ஸ் பாண்ட்' நடிகர் சியன் கோன்னெரி காலமானார்

'ஜேம்ஸ் பாண்ட்' நடிகர் சியன் கோன்னெரி காலமானார்

1 mins read
185f2cbf-01d0-43a4-883f-dd88263f2928
படம்: மீடியாவொர்க்ஸ் -
multi-img1 of 2

'ஜேம்ஸ் பாண்ட்' திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற சியன் கோன்னெரி காலமானார். அவருக்கு வயது 90.

பாஹாமாசில் வாழ்ந்து வந்த அவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஏழ்மை நிலையில் பிறந்து, குடிசைப் பகுதியில் வளர்ந்த அவர், சவப்பெட்டிகளுக்கு பாலிஷ் போடுவது, பால் விற்பது, பாதுகாவலர் போன்ற பணிகளைச் செய்தவர்.

பின்னாளில் உடற்கட்டு அழகை பொழுதுபோக்காக அவர் மேம்படுத்தியதால், அவரால் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்து, உலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடிந்தது.

ஆஸ்கர் விருது பெற்ற அவர், 2 முறை பாஃப்டா விருதையும் 3 முறை கோல்டன் குளோப்ஸ் விருதும் பெற்றவர்.

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை திரப்படங்களில் புகுத்தி 7 படங்களில் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றவர் அவர்.

தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர், இண்டியானா ஜோன்ஸ், லாஸ்ட் குரூசேட், தி ராக் போன்றவை அவர் நடித்த மற்ற படங்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமது 90வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.