மேற்கு துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தால் தரைமட்டமாகிய கட்டடத்திலிருந்து 70 வயது ஆடவர் ஒருவரை மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்புடன் காப்பாற்றினKaர். ஏஜியன் கடலில் மையங்கொண்ட அந்த நிலநடுக்கம் துருக்கியையும் கிரீசையும் தாக்கியதில் குறைந்தது 46 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 900 பேர் காயமடைந்தனர்.
துருக்கியின் மூன்றாம் ஆகப் பெரிய நகரமான இஸ்மிரில் மரண எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. கிரீசிலுள்ள சமோஸ் தீவில் பதின்ம வயதினர் இருவர் உயிரிழந்ததுடன் குறைந்தது 19 பேர் காயமடைந்தனர்.
நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 6.9 என்று இஸ்தான்புல் நகரில் உள்ள கண்டில்லி ஆய்வு நிலையம் உறுதி செய்ததது. இந்நிலநடுக்கத்தால் இஸ்மிரில் சிறிய சுனாமி உண்டானது.

