அயர்லாந்தின் டப்லின் நகரில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளும் மர்மமான முறையில் மாண்டு கிடக்கக் காணப்பட்டிருந்தனர்.
37 வயது சீமா பானுவும் அவரது பிள்ளை அஸ்விரா,11, மற்றும் பைசான் சயித்,7, ஆகியோரும் ஏழு மாதங்களுக்கு முன்னதாக இந்தியாவிலிருந்து அயர்லாந்திற்கு இடம்பெயர்ந்தனர். சீமாவின் கணவர் சையது சமீர் அங்கு மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
இந்தச் சம்பவத்தை கொலை என வகைப்படுத்தியுள்ள அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

