நஜீப்பின் புதிய அங்கீகாரத்திற்கு எதிர்ப்புக்குரல்

நஜீப்பின் புதிய அங்கீகாரத்திற்கு எதிர்ப்புக்குரல்

1 mins read
322d6844-ff80-4f0f-a76d-a731ebd0ad48
-

பாரிசான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் மன்றத்தில் தலைவராக லிம் கிட் சியாங்கின் நியமனத்தை அங்கீகரிக்காதபடி மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங், அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற அங்கீகாரங்கள், நாடாளுமன்றத்தை புதிய அவமானத்திற்கும் களங்கத்திற்கும் உள்ளாக்கிவிடும் எனத் தெரிவித்தார்.

1எம்டிபி தொடர்பிலான ஊழல் வழக்கை எதிர்நோக்கும் திரு நஜிப், நாடாளுமன்றத்தில் தமது கட்சி எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்த உத்தரவுகளை முடிவு செய்யவும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் யார் முதலில் பேசுவது என்பதை நிர்ணயிக்கவும் இந்தப் பதவி அதிகாரம் அளிக்கிறது.

67 வயது திரு நஜிப், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து ஜூலை மாதம் அவருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையுடன் 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. ஆயினும், அந்தத் தண்டனையின் நிறைவுக்கான தற்காலிக ஒத்திவைப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அவர் தற்போது சிறைக்கு வெளியே இருக்கிறார்.