வன்முறைக்கு வாய்ப்பு; தயார்நிலையில் போலிஸ்

2 mins read
5e22d6cc-870d-4ae2-8649-81f3e39d96fc
வன்முறையாளர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கலிஃபோர்னிய மாநிலம், பெவர்லி ஹில்ஸ் நகரில் பல கடைகளும் இப்படித் தடுப்புகளை அமைத்து கண்ணாடிகளை மறைத்து வருகின்றன. படம்: ஏஎஃப்பி -

அமெ­ரிக்­கா­வில் இன்று அதி­பர் தேர்­தல் நடக்­க­வி­ருக்­கிறது. குடி­ய­ர­சுக் கட்சி சார்­பில் இப்­போ­தைய அதி­பர் டோனல்ட் டிரம்ப் மீண்­டும் கள­மி­றங்­கி­யுள்­ளார். அவரை எதிர்த்து ஜன­நா­ய­கக் கட்சி சார்­பில் ஜோ பைடன் போட்­டி­யி­டு­கி­றார்.

துணை அதி­பர் வேட்­பா­ளர்­களாக குடி­ய­ர­சுக் கட்சி சார்­பில் மைக் பென்­சும் ஜன­நா­ய­கக் கட்சி சார்­பில் கமலா ஹாரி­சும் நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

தகு­தி­யுள்ள வாக்­கா­ளர்­களில் மூன்­றில் ஒரு பங்­கி­னர் ஏற்­கெனவே வாக்­க­ளித்துவிட்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. அவர்­களில் அதி­பர் டிரம்ப்­பும் ஒரு­வர்.

இந்­நி­லை­யில், இன்று ஒரு சில இடங்­களில் வாக்­க­ளிப்­பிற்கு இடை­யூறு விளை­விக்­கும் நிகழ்­வு­களும் வன்­மு­றைச் சம்­ப­வங்­களும் இடம்­பெ­ற­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அவ்­வாறு நிக­ழா­மல் தடுக்­கும் வித­மாக லாஸ் வேகஸ், நியூ­யார்க், டெட்­ராய்ட், சிகாகோ, ஹூஸ்­டன், லாஸ் ஏஞ்­ச­லிஸ் உள்­ளிட்ட முக்­கிய நக­ரங்­களில் போலிஸ் பாது­காப்பு அதி­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இடது, வல­து­சாரி குழுக்­களுக்கு இடையே மோதல்­கள் நிகழ்ந்த வர­லாற்­றைக் கொண்ட பென்­சில்­வே­னி­யா­வி­லும் மிச்­சி­கன், ஃபுளோரிடா, ஜார்­ஜியா, ஓரி­கன் ஆகிய மாநி­லங்­களும் அணுக்­க­மாகக் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அண்­மைய மாதங்­களில், மோதல் சம்­ப­வங்­க­ளின்­போது போராட்­டக்­கா­ரர்­கள் ஐவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர்.

டிரம்ப், பைடன் ஆத­ர­வா­ளர்­கள் இடையே மோதல் வெடித்தால், ஆயு­த­மேந்­திய கும்­பல்­கள் திடீ­ர் எ­னத் தோன்றி தாக்­கு­த­லில் இறங்­கினால், இணை­யத் தாக்­கு­தல் இடம்­பெற்­றால் அல்­லது வெடி­குண்டு வீசப்­பட்­டால் அவற்றை எதிர்­கொள்ள ஆயத்­த­மா­கும் வித­மாக பாவ­னைப் பயிற்­சி­களும் இடம்­பெற்­றன.

வாக்கு வித்­தி­யா­சம் குறை­வாக இருந்து, இறுதி வெற்­றி­யா­ளரை அறி­விப்­ப­தில் ஒரு­வேளை குழப்­பம் ஏற்­பட்­டால், அதன்­பி­றகு இடம்­பெற வாய்ப்­புள்ள சம்­ப­வங்­கள் குறித்து பல போலிஸ் அதி­கா­ரி­களும் தீவி­­வா­தத் தடுப்பு நிபு­ணர்­களும் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

தீவிர வல­து­சா­ரிக் கொள்­கை­யைப் பின்­பற்­றும் சிலர், வன்­மு­றை­யைத் தூண்டி, உள்­நாட்­டுப் போர் என்ற தங்­க­ளது இலக்கை அடைய இன்­றைய தேர்­தலை ஒரு வாய்ப்­பா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளக்­கூடும் என்று தீவி­ர­வா­தக் குழுக்­கள் குறித்து ஆய்வு செய்து வரும் திரு­வாட்டி கேஸி மில்­லர் கூறி­னார்.

"வாக்­க­ளிப்­பில் மோசடி அல்­லது முறை­கேடு நடந்­த­தாக அதி­பர் டிரம்ப்போ அல்­லது வல­து­சாரி ஊட­கமோ செய்­தி­களை வெளி­யி­டும் பட்­சத்­தில் வாக்­கா­ளர்­கள் விரைந்து வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் திர­ளக்­கூ­டும்," என்­றார் திரு­வாட்டி மில்­லர்.

நியூ­ஜெர்சி, விஸ்­கான்­சின், டெக்­சஸ் போன்ற பல மாநி­லங்­களில் தேசிய பாது­காப்­புப் படை­யி­னர் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

குறிப்புச் சொற்கள்