மலேசியாவில் மாமன்னர், பிரதமர் அவமதிப்பு: இருவரிடம் விசாரணை

மலேசியாவில் மாமன்னர், பிரதமர் அவமதிப்பு: இருவரிடம் விசாரணை

1 mins read
abf1453a-d61c-4bec-be1c-744df01bf763
திரு லோக்மன் (இடது), எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹித் ஆகியோர் மலேசிய மாமன்னர், பிரதமர் மீது அவதூறு பரப்பியதாக தனித்தனியே விசாரிக்கப்படுகின்றனர். படங்கள்: LOKMAN NOOR ADAM/FACEBOOK, DR MUJAHID YUSOF RAWA/FACEBOOK -

மலே­சிய மாமன்­ன­ரை­யும் பிர­த­மர் முகைதீன் யாசி­னை­யும் அவ­ம­தித்­த­தா­கக் கூறப்­பட்ட புகார் தொடர்­பில் முன்­னாள் அமைச்­சர் உட்­பட அர­சி­யல்­வா­தி­கள் இரு­வரை போலிஸ் விசா­ரித்து வரு­கிறது.

பிர­த­மரை அவ­ம­திக்­கும் வித­மாக ஃபேஸ்புக்­கில் காணொ­ளி ஒன்றை வெளி­யிட்­ட­தா­கப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, முன்­னாள் அம்னோ உச்­ச­மன்ற உறுப்­பி­ன­ரான லோக்­மன் நூர் ஆடம் ஒரு­நாள் காவ­லில் வைத்து, விசா­ரிக்­கப்­பட்­டார். பர­வ­லா­கப் பகி­ரப்­பட்ட அந்தக் கா­ணொ­ளி­யைப் பதி­வேற்­றம் செய்ய அவர் பயன்­படுத்­திய மின்­ன­ணுக் கரு­வி­யும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

அதே­போல, முந்­தைய பக்­கத்­தான் ஹரப்­பான் ஆட்­சி­யின்­போது அமைச்­ச­ராக இருந்த முஜா­கித் யூசோஃப் ராவா, மாமன்­னரை இழிவு­ப­டுத்­தி­விட்­ட­தாக விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார். கடந்த மார்ச் மாதம் பிர­த­ம­ராக முகை­தீன் யாசினை நிய­மித்­ததை அடுத்து, மாமன்­னரை அவ­ம­திக்­கும் வகை­யில் அவர் கருத்துரைத்ததாகச் சொல்­லப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், போலிஸ் விசா­ரணைக்கு முழு­மை­யாக ஒத்­து­ழைப்பு அளிப்­பேன் என்று முஜா­கித் கூறி இருக்­கி­றார்.

குறிப்புச் சொற்கள்