தேர்தலின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பும் அதிபர் டிரம்ப்

2 mins read
a450d191-582d-4e30-9b65-e5e1afb5a561
படம்: ஏஎஃப்பி -

ஃபிளடெல்­ஃபியா: அமெ­ரிக்க அதி­பர் தேர்­தல் தொடர்­பில் மீண்­டும் அதன் நேர்மை குறித்து கேள்வி எழுப்­பி­யுள்­ளார் அதி­பர் டோனல்ட் டிரம்ப். தேர்­தல் நடை­பெ­றும் நாளை­யும் தாண்டி வாக்கு எண்­ணிக்கை நீண்­டால், அது ஒரு 'மோச­மான நிலை' என்று அவர் குறிப்­பிட்­டார்.

அவ்­வாறு நடந்­தால், தம்­மு­டைய வழக்­க­றி­ஞர்­களும் விவ­கா­ரத்­தில் ஈடு­ப­டு­வர் என்று தெரி­வித்­தார்.

இன்று அமெ­ரிக்க அதி­பர் தேர்­தல். திரு டிரம்ப்­பும் அவ­ருக்கு எதி­ராக ஜோ பைட­னும் மோதும் நாள்.

இது­வரை கருத்­துக்­க­ணிப்­பு­களின்­படி ஜோ பைடனே முன்­னணி­யில் இருக்­கி­றார்.

இந்­நி­லை­யில் வாக்கு வேட்­டை­யில் இறங்­கிய திரு டிரம்ப், ஆத­ரவு திரட்­டிப் பல மாநி­லங்­க­ளுக்கு இறு­திக்­கட்ட பிர­சா­ரத்­திற்­குச் சென்ற வண்­ணம் இருந்­தார்.

திரு பைடனோ, முக்­கிய மாநி­ல­மா­கக் கரு­தப்­படும் பென்­சில்­வேனி­யா­வுக்­குச் சென்று 'வெளியே சென்று வாக்­க­ளி­யுங்­கள்' என அங்கு கூடி­ய­வர்­க­ளி­டம் வலி­யு­றுத்­தி­னார்.

அஞ்­சல்­வ­ழி­யாக அமெ­ரிக்­கர்­கள் பலர் முன்­கூட்­டியே வாக்­களிக்க முந்­தி­னர். இதன்­படி சுமார் 60 மில்­லி­யன் வாக்­கு­கள் போடப்­பட்­டு­விட்­டன.

ஒரு சில மாநி­லங்­களில் வாக்கு­களை எண்ண நாட்­கள், ஏன் வாரங்­கள்­கூட எடுக்­க­லாம் என்று கூறப்­படு­கிறது. இத­னால் வாக்­க­ளிக்­கும் நேரம் முடி­வ­டைந்து சில மணி நேரத்­தில் வெற்­றி­யா­ளர் யார் என்று உறு­திப்­ப­டுத்த முடி­யாது.

"தேர்­தல் முடிந்து நீண்ட காலத்­துக்கு முடி­வுக்­காக காத்­தி­ருப்­பது நியா­ய­மில்லை என்று நினைக்­கிறேன்," என்று நார்த் கலி­ஃபோர்­னி­யா­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார் திரு டிரம்ப்.

பென்­சில்­வே­னியா உட்­பட சில மாநி­லங்­கள், அஞ்­சல் வழி வந்த வாக்­கு­க­ளைத் தேர்­தல் நாள் வரை எண்­ணா­மல் வைத்­தி­ருக்­கும் என்­றும் அது வாக்கு எண்­ணிக்­கையை மெது­வ­டை­யச் செய்­யும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அஞ்­சல் மூலம் கிடைக்­கப்­ பெறும் வாக்­கு­கள், மோச­டி­யாக இருக்­க­லாம் என்று திரு டிரம்ப் பல­முறை ஆதா­ர­மின்றி கூறி வரு­கி­றார். ஆனால் அமெ­ரிக்­கத் தேர்­தல்­களில் அது மிக அரிது என்­கின்­ற­னர் தேர்­தல் நிபு­ணர்­கள்.

அமெ­ரிக்­கத் தேர்­தல்­களில் அஞ்­சல் மூலம் வாக்­கு­க­ளைச் சமர்ப்­பிக்­கும் முறை, நீண்­ட­கா­ல­மாக நடப்­பில் இருக்­கும் ஓர் அம்­ச­மாகும். 2016ஆம் ஆண்­டில் நான்­கில் ஒரு­வர் இம்­மு­றை­யில் வாக்­கைச் சமர்ப்­பித்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கொவிட்-19 கொள்ளை நோய் சூழ­லில் அஞ்­சல் மூலம் வாக்­களிக்­கும் முறையே பாது­காப்­பா­னது என்று ஜன­நா­ய­கக் கட்சி வலி­யு­றுத்தியும் வரு­கிறது. ஆனால் தேர்­தல் தினத்­தன்று பலர் நேர­டி­யாக வாக்­க­ளிப்­பர் என்ற நம்­பிக்­கை­யில் உள்­ள­னர் திரு டிரம்ப் மற்­றும் குடி­ய­ர­சுக் கட்­சி­யி­னர்.

தேர்­தல் முடி­வு­கள் வெளி­வ­ராத நிலை­யில் தாம் முன்­ன­ணி­யில் இருப்­ப­தா­கத் தெரிந்­தால் உடனே தாமே வெற்­றி­யா­ளர் என்று பிர­க­ட­னப்­ப­டுத்­தி­வி­டு­வார் என்று தமக்கு நம்­ப­க­மா­ன­வர்­க­ளி­டம் திரு டிரம்ப் கூறி­ய­தாக வெளிவந்த அறிக்­கையை அவர் மறுத்­துள்­ளார்.