இஸ்தான்புல்: துருக்கியின் ஏகன் கடல் பகுதியை வெள்ளிக்கிழமை அன்று உலுக்கிய நிலநடுக்கத்தால் குறைந்தது 81 பேர் உயிர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இடிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்து வர, நேற்று இஸ்மிர் நகரில் உள்ள கட்டட இடிபாடுகளிலிருந்து மூன்று வயது சிறுமி காப்பாற்றப்பட்டார்.
நிலநடுக்கத்துக்கு 65 மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்டார் 'எலிஃப்' என்ற அந்த சிறுமி.
சனிக்கிழமை அன்று சிறுமியின் மூன்று சகோதரர்களும் தாயாரும் மீட்கப்பட்டனர். ஆனால் சிறுமியின் ஒரு சகோதரர் பின்னர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 960 பேர் நிலநடுக்கத்தில் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது.

