மனைவியை அடித்தே கொன்ற கணவன்; வேடிக்கை பார்த்தவர்களுக்கு உதவ மனமில்லை

மனைவியை அடித்தே கொன்ற கணவன்; வேடிக்கை பார்த்தவர்களுக்கு உதவ மனமில்லை

1 mins read
55b420f1-4148-457d-a7d9-d08a18667e03
-

சீனா­வில் ஆட­வர் ஒரு­வர் தன் மனை­வி­யின் உயிர் போகும்­வரை தாக்­கிய காணொ­ளி­களும் படங்­களும் இணை­யத்­தில் வலம் வரு­கின்­றன. இவை பல மில்­லி­யன் முறை பகி­ரப்­பட்­டும் வரு­கின்­றன. இதை­ய­டுத்து பலர் சீற்­றங்­கொண்டு, குடும்ப வன்­முறைக்கு எதி­ரா­கக் குரல் கொடுக்­கத் தொடங்­கி­யுள்­ள­னர்.

ஷுஸோவ் நக­ரில் சனிக்­கி­ழமை காலை நடந்த இச்­சம்­ப­வத்­தில் மனை­வி­யைப் பின்­னால் ஏற்­றி­ய­படி ஆட­வர் மின்-ஸ்கூட்­டர் ஒன்­றில் சென்­று­கொண்­டி­ருந்­த­தா­க­வும் அப்­போது ஒரு வாக­னத்­தின் மீது மோதி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

விபத்­தி­லி­ருந்து தப்­பிக்க ஆட­வர் அவ்­வி­டத்தை விட்டுப் போக முயன்­ற­போது அவ­ரின் மனைவி அவ­ரைத் தடுத்­தார். இத­னால் இரு­வ­ருக்­கு­மி­டையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. பின்­னர், மனை­வியை அந்த ஆட­வர் தரை­யில் தூக்­கி­யெ­றிந்து தாக்­கத் தொடங்­கி­ய­தாகக் கூறப்­ப­டு­கிறது. அதி­க­மா­கப் பகி­ரப்­படும் காணொளி ஒன்­றில், ஆட­வர் ஒரு முக்­கா­லி­யைக் கொண்டு மனை­வி­யைத் தாக்­கு­வ­தா­கத் தெரி­கிறது.

காணொ­ளி­யில் மிதி­வண்டி ஓட்டி­கள், மோட்­டார் வாக­ன­மோட்டி­கள், பாத­சா­ரி­கள் என பலர் தாக்கு­தலை வேடிக்கை பார்ப்­ப­தைக் காண முடி­கிறது. ஆனால் யாருமே உத­விக்கு வர­வில்லை. பலர் காட்­சி­யைத் தங்­கள் கைபே­சி­யில் பதிவு செய்­வ­தில் குறி­யாக இருந்­த­னர்.

சம்­ப­வத்தை வேடிக்கை பார்த்­த­வர்­க­ளின் செய­லும் சில சீன சமூ­கப் பிரி­வு­களில் குடும்ப வன்­முறை தொடர்­பான அலட்­சி­யப் போக்­கும் இணை­ய­வாசி­க­ளின் சாட­லுக்­குள்­ளா­கி­யுள்­ளன.