முன்னாள் தென்கொரிய அதிபர் மீண்டும் சிறையில்

முன்னாள் தென்கொரிய அதிபர் மீண்டும் சிறையில்

1 mins read
a1c355c2-516e-4828-afdd-782670e49a0b
-

சோல்: முன்னாள் தென்கொரிய அதிபர் லீ மியுங்-பாக், மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்ததை அடுத்து 25.2 பில்லியன் வானை (S$30.3 மி.) கையாடியது, 9.4 பில்லியன் வான் கையூட்டு பெற்றது தொடர்பில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் 78 வயது லீ, தம் 17 ஆண்டுச் சிறைத் தண்டனையை 2036ஆம் ஆண்டுவரை நிறைவேற்ற வேண்டும். சிறைவாசத்தை முடித்துக் கொள்ளும்போது அவருக்கு 95 வயதாக இருக்கும். 2008 முதல் 2013 வரை தென்கொரிய அதிபராக லீ பணியாற்றினார்.