தோழியின் கொலை தொடர்பில் 7 நாள் விசாரணைக் காவலில் 19 வயது இளம்பெண்

தோழியின் கொலை தொடர்பில் 7 நாள் விசாரணைக் காவலில் 19 வயது இளம்பெண்

1 mins read
7cf2d377-1c3a-4601-b08b-cc2211ff96ef
படம்: NST -

மலேசியாவின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு 19 வயது இளம்பெண்ணை போலிசார் விலங்குடன் இன்று (நவம்பர் 3) அழைத்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சிடி நூர் சூர்யா இஸ்மாயில் எனும் தோழியின் கொலை தொடர்பிலான விசாரணைக்காக விசாரணைக் காவலுக்கு அனுமதி கோரி போலிசார் அவரை அழைத்து வந்தனர்.

போலிஸ் விசாரணைக்காக 7 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்..

காலை 10.10 மணியளவில் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப் பட்ட அந்தப் பெண்ணுடன் இரண்டு பெண் காவலர்கள் இருந்தனர்.

விசாரணைக்காக தம் தாயாருடன் வந்த அந்தப் பெண்ணை டெலிமோங் காவல் நிலையத்தில் நேற்று காலை 8.15 மணியளவில் போலிசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் 19 வயதான சிட்டி நூர் சூர்யாவின் சடலத்தை அவரது 15 வயது சகோதரி கண்டுபிடித்தார். சிட்டி நூர் சூர்யாவின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இடது கை வெட்டப்பட்டிருந்தது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் பெண், சிட்டி நூர் சூர்யாவின் வீட்டுக்கருகே இருந்ததைக் காட்டும் காணொளி நேற்று சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவியது.