இலங்கையில் கரையொதுங்கிய 120 திமிங்கிலங்கள்

இலங்கையில் கரையொதுங்கிய 120 திமிங்கிலங்கள்

1 mins read
4e94f254-4fef-4c25-b156-9bd2c4b6b3b2
காயமடைந்த இரு திமிங்கிலங்கள் கரையிலேயே இறந்துபோனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

இலங்கையில் கடற்கரையில் ஒதுங்கிய 120 திமிங்கிலங்கள் மீண்டும் கடலுக்குள் விடபட்டன.

ஆனால், காயமடைந்த இரு திமிங்கிலங்கள் கரையிலேயே இறந்துபோனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து சுமார் 25 கிமீ. தெற்கில் உள்ள பனடூரா பகுதியில் குட்டை துடுப்புகளைக் கொண்ட சுமார் 120 'முன்னோடித் திமிங்கிலங்கள்' திங்கட்கிழமை இரவு கரையொதுங்கின.

அவற்றை கடலுக்குள் திருப்பி விடும் பணியில் கடற்படை வீரர்களும் தொண்டூழியர்களும் இறங்கினர். இரவு முழுவதும் தொடர்ந்த பணியில் அவை கடலுக்குள் விடப்பட்டன என்று கடற்படைப் பேச்சாளர் இண்டிகா டி லிவா கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் டாஸ்மேனியாவில் 470 திமிங்கிலங்கள் கரையொதுங்கின; ஆனால், அவற்றில் 110 மட்டுமே கடலுக்குள் திருப்பிவிடப்பட்டன. மற்றவை மடிந்துபோயின.

இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் பனடூராவில் கரையொதுங்கியது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்ட அதிகாரிகள், அதற்கான காரணம் தெரியவில்லை என்றனர்.

சுமார் ஆறு அடி நீளம் வரை வளரக்கூடிய 'முன்னோடித் திமிங்கிலங்கள்' ஒரு டன் எடை வரை இருக்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்