மலேசியா: ஹோட்டலில் இருந்து வேலை செய்யும் ஏற்பாடு

மலேசியா: ஹோட்டலில் இருந்து வேலை செய்யும் ஏற்பாடு

1 mins read
398032b8-6037-4b54-837f-e1185fcf508d
படம்: HATTENHOTEL/INSTAGRAM -

ஜார்ஜ் டவுன்: மலே­சி­யாவின் சில பகு­தி­களில் நிபந்­த­னை­யு­டன் கூடிய நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை நடப்­பில் இருப்­ப­தால் கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் வசிப்­போர் உள்­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­வ­தற்­குத் தடங்­கல் ஏற்­பட்­டுள்­ளது.

இத­னால் பினாங்கு, மலாக்கா, ஜோகூர், கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் இயங்­கும் ஹோட்­டல்­கள் மீண்­டும் போதிய வரு­மா­ன­மின்றி தவிக்­கின்­றன. எனவே, வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கவ­ரும் வித­மாக புது யோச­னை­களை ஹோட்­டல்­கள் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அவற்­றில் ஒன்று, ஊழி­யர்­கள் ஹோட்­ட­லில் இருந்து வேலை செய்­யும் நடை­மு­றையை ஊக்­கு­விப்­பது.

இந்த நடை­மு­றைக்கு ஏற்ப பினாங்கு, கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் செயல்­பட்டு வரும் பல ஹோட்­டல்­கள், தங்­க­ளது வளா­கங்­களை வேலை­யி­டங்­க­ளாக மாற்றி வரு­கின்­றன.

இந்த யோச­னையை வாடிக்­கை­யா­ளர்­கள் பல­ரும் வர­வேற்­ப­தாக செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. பல மாதங்­க­ளாக வீட்­டி­லி­ருந்து வேலை செய்து சலித்­துப்­போன ஊழி­யர்­கள் பல­ருக்கு ஹோட்­ட­லில் தங்கி வேலை செய்­வதால் புத்­து­ணர்ச்சி கிடைத்­துள்­ள­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

ஆனால் ஊழி­யர்­கள் ஹோட்­ட­லில் தங்கி வேலை செய்வதில் ஏற்படும் செலவை நிறு­வ­னங்­கள் ஏற்­றுக்­கொண்­டால் மட்­டுமே தாங்­கள் அவ்­வாறு செய்­யத் தயார் என்­பது ஊழி­யர்­க­ளின் கருத்து.

கொரோனா கிருமி பர­வும் சூழ­லில் வீட்­டின் ஒரு பகு­தியை அலு­வ­ல­க­மாக மாற்­றிக்­கொண்­ட­வர்­கள் ஹோட்­ட­லில் தங்கி வேலை செய்­வதை விரும்­ப­மாட்­டார்­கள் என்று ஹோட்­டல் துறை­யைச் சேர்ந்­த­வர்­கள் சிலர் கூறு­கின்­ற­னர்.