நால்வரைப் பலிகொண்ட வியன்னா தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது

நால்வரைப் பலிகொண்ட வியன்னா தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது

1 mins read
de64a323-2bc8-4a28-b3b9-42305c9406b7
படம்: ராய்ட்டர்ஸ் -

ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில் நேற்று முன்தினம் (நவம்பர் 2) அன்று நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஐஎஸ் அமைப்பின் பிரசாரக் குழுவான அமாக், "வியன்னாவில் துப்பாக்கிச் சூட்டை ஒரு ஐஎஸ் போராளி நடத்தினார்," என தாக்குதல் நடத்தியவரின் ஆயுதம் தாங்கிய புகைப்படத்துடன் குறிப்பிட்டது.

அந்தத் தாக்குதல்காரன், ஐஎஸ் போராளி அமைப்பின் தலைமைக்கு பற்றுறுதியை வழங்கியபோது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றையும் அமாக் வெளியிட்டது.

சிறையில் முன்பு இருந்த ஒரு இஸ்லாமிய தீவிரவாதி தாக்குதலை நடத்தியதாக ஆஸ்திரிய போலிசார் நேற்று தெரிவித்திருந்தனர்.

தாக்குதல் நடத்திய 20 வயது குஜ்டிம் ஃபெஸுலாய் தானியங்கி துப்பாக்கியைக் கொண்டு கூட்டத்தினரை நோக்கி சுடத் தொடங்கியதும் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஃபெஸுலாயின் வீடு உட்பட 18 இடங்களைச் சோதனையிட்ட ஆஸ்திரிய போலிசார் 14 பேரைக் கைது செய்தனர்.