தன்னை கொரோனா தொற்றியதாக நினைத்து மகளைக் கொன்ற தந்தை

தன்னை கொரோனா தொற்றியதாக நினைத்து மகளைக் கொன்ற தந்தை

1 mins read
3a945f13-a527-413a-a40a-1a1a4132165a
இஜி என அழைக்கப்படும் ஆடவர் குடுஸ் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். படம்: SCREENGRAB FROM GOOGLE MAPS -
Google News Preferred Icon

தன்னை கொரோனா தொற்றிவிட்டதாக நினைத்த 48 வயது இந்தோனீசிய ஆடவர் ஒருவர், அதனால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்தார்.

அப்போது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த எட்டு வயது மகளையும் கொன்றுவிடுவது என திடீரென முடிவுசெய்த அவர், அதன்படி மகளைக் கழுத்தை நெரித்தார்; பின்னர் தன் மணிக்கட்டை அறுத்து, அவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இஜி என அழைக்கப்படும் அவர் விழுந்து கிடந்ததைக் கண்ட அண்டை வீட்டார் போலிசுக்குத் தகவல் அளித்தனர்.

போலிஸ் வந்து பார்த்தபோது, தந்தை-மகள் இருவரும் உயிருடன் இருந்ததாகவும் ஆனாலும் மருத்துவமனைக்குச் செல்லுமுன் அச்சிறுமி இறந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

தன் மகளுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்ததால் அவளையும் நிச்சயம் கொரோனா தொற்றியிருக்கும் என நினைத்து, அந்த ஆடவர் அவ்வாறு செய்ததாக போலிஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்