அமெரிக்க தேர்தல்: 60க்கு மேற்பட்டோர் கைது; துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் பறிமுதல்

அமெரிக்காவில் நேற்று முன்தினம் தேர்தல் முடிவடைந்து, நேற்றிலிருந்து வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்றிரவு அமெரிக்காவின் சில நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

போர்ட்லாந்து நகரில் 11 பேரை போலிசார் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து பட்டாசுகள், சுத்தியல்கள், துப்பாக்கி போன்றவற்றை போலிசார் பறிமுதல் செய்ததாக ஓரிகன் ஆளுநர் கேட் பிரௌன் தெரிவித்தார்.

இந்நிலையில் நியூயார்க் நகரில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் பிரிவு தெரிவித்தது.

அட்லாண்டா, டெட்ராய்ட், நியூயார்க், ஆக்லாந்து உள்ளிட்ட நகரங்களிலும் நேற்று இரவு ஆர்ப்பாட்டங்களில் சிலர் ஈடுபட்டனர்.

மிச்சிகனில் அனைத்து வாக்குகளையும் எண்ண வேண்டும் என்றும் சுமுகமான முறையில் அதிகாரம் கைமாற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

165 அடித்தள அமைப்புகள், ஆலோசனைக் குழுக்கள், தொழிலாளர் சங்கங்கள் போன்றவற்றின் கூட்டமைப்பான ‘தேர்தல் முடிவுகளை பாதுகாப்போம்’ எனும் இயக்கத்தின் உள்ளூர் பங்காளிகள் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!