பணி இடைநீக்கம்: ஆத்திரத்தில் பணியிடத்தைச் சேதப்படுத்தி தீ வைத்த ஆடவர் சாலை விபத்தில் மாண்டார்

பணி இடைநீக்கம்: ஆத்திரத்தில் பணியிடத்தைச் சேதப்படுத்தி தீ வைத்த ஆடவர் சாலை விபத்தில் மாண்டார்

1 mins read
0baf7fd0-f900-413f-b8d4-fe873ac70225
படம்: தி ஸ்டார் -

வேலையிடத்தை காரால் மோதி சேதப்படுத்தி, தீ வைத்துக் கொளுத்த முயன்ற தொழிற்சாலை மேலாளர் ஒருவர் பின்னர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மலேசியாவின் ஈப்போவில் நேற்று நிகழ்ந்தது.

பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த ஆடவர், தமது ஆலையின் மனிதவள அலுவலகம் மீது காரை விட்டு மோதினார்.

பின்னர் காரிலிருந்து இறங்கிய அவர், அலுவலகம் மீது பெட்ரோல் குண்டை வீசி, தீ வைத்தார்.

அங்கிருந்த பாதுகாவலர்களே தீயை அணைத்துவிட்டனர் என்றும் சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை என்றும் ஈப்போ போலிஸ் துணை ஆணையர் திரு அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

அவர் ஆயுதம் எதுவும் வைத்திருக்கவில்லை என்றபோதும் அவர் ஒரு மில்லியன் ரிங்கிட் அளவிற்குச் சேதத்தை ஏற்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் தொழிற்சாலை வளாகத்தைவிட்டு வெளியேறிய அவர், சாலையில் இறங்கி நடந்து சென்றதாகவும் அப்போது இழுவை வண்டி மோதி அவர் இறந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

"அவர் வேண்டுமென்றே சாலையில் இறங்கி நடந்துசென்றதைக் கண்டவர்கள் கூறினர். ஒழுங்குமுறை நடவடிக்கை காரணமாக அவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தற்காலிகமாக வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்ததே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என நம்புகிறோம்," என்று திரு அஸிஸ் கூறினார்.