மலேசியாவில் ஒரே நாளில் 1,755 பேருக்கு கொவிட்-19; மேலும் இருவர் உயிரிழப்பு

மலேசியாவில் ஒரே நாளில் 1,755 பேருக்கு கொவிட்-19; மேலும் இருவர் உயிரிழப்பு

1 mins read
306d966f-3e75-48c3-a20d-06465a1179d0
படம்: இபிஏ -

மலேசியாவில் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 1,755 பேருக்கு கிருமித்தொற்று பதிவானது. இதனையடுத்து அந்த நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,189 ஆகியுள்ளாது.

தற்போது 11,530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்ளூரில் இன்று 1,752 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. வெளிநாடுகளிலிருந்து திரும்பிய இரு மலேசியர்கள், ஒரு வெளிநாட்டவர் என மூவருக்கு இன்று தொற்று பதிவானது.

தற்போது 83 கொவிட்-19 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அவர்களில் 32 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கொவிட்-19ஆல் மேலும் இருவர் உயிரிழந்ததையடுத்து, மலேசியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 279 ஆனது.

குறிப்புச் சொற்கள்