பிரிட்டனின் ஈஸ்ட் லண்டனில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி, நிகிஷ் என்ற மூன்று வயது மகனையும் பவின்யா என்ற 19 மாத மகளையும் கத்தியால் குத்திக் கொன்றதை நடராஜா நித்திய குமார், 41, என்ற ஆடவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்த நேரத்தில் குளியலறையில் இருந்த அப்பிள்ளைகளின் தாய் நிஷா, பின்னர் நடந்ததை அறிந்ததும் போலிசுக்குத் தகவல் தந்தார்.
அவசர மருத்துவப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது பவின்யா ஏற்கெனவே இறந்து கிடந்தாள்.
மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி நிகிஷின் உயிர் பிரிந்தது.
வேலையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகத் தன் பிள்ளைகளைத் தானே கொன்றுவிட்டதை போலிசிடம் நித்தியகுமார் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளான்.

