முகைதீன்: மலேசியர்கள் பெருமைப்பட வேண்டும்

முகைதீன்: மலேசியர்கள் பெருமைப்பட வேண்டும்

2 mins read

கோலாலம்பூர்: கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது ஏற்­பட்ட சவால்­களை எதிர்­கொள்ள மலே­சி­யர்­கள் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயல்­பட்­ட­தாக மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் பாராட்­டி­யுள்­ளார்.

இனம், சம­யம் பாகு­பாடு பாராது ஒன்­றி­ணைந்து செயல்­பட்­ட­தற்கு மலே­சி­யர்­கள் அனை­வ­ரும் பெருமைப்பட வேண்­டும் என்று அவர் கூறி­னார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உத­வு­வது அர­சாங்­கத்­தின் கடமை என்று அவர் தெரி­வித்­தார்.

"ஒற்­றைத் தாய்­மார்­கள், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்­தோர் ஆகி­யோ­ருக்கு நிதி­யு­தவி வழங்­கப்­பட வேண்­டும்.

"நாடு வளர்ச்­சியை நோக்கி சென்­று­கொண்­டி­ருக்­கை­யில் இவர்­களை மறந்­து­வி­டக்­கூ­டாது. தேவை­யான உணர்­வு­பூர்வ ஆத­ரவை இவர்­க­ளுக்கு வழங்க வேண்­டும்," என்று தேசிய குடும்ப மாதத்தை நேற்று தொடங்கி வைத்­த­போது திரு முகை­தீன் கூறி­னார்.

தேசிய குடும்ப மாதத்தை மலே­சி­யா­வின் சமூக மேம்­பாட்டு அமைச்சு நேற்று இணை­யம் மூலம் நடத்­தி­யது.

'எங்­கள் குடும்­பங்­க­ளைப் பாது­காப்­போம்' என்ற கருப்­பொ­ருளை இவ்­வாண்­டின் தேசிய குடும்ப மாதம் கொண்­டுள்­ளது.

கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நி­லை­யால் மலே­சியா பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் இந்­தக் கருப்­பொ­ருள் ஏற்­பு­டை­யது என நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

"நாட்­டின் நிலைத்­தன்­மைக்கு குடும்­பங்­க­ளின் வலி­மையே முக்­கிய தூணாக அமை­கிறது. கொவிட்-19, அத­னால் ஏற்­பட்­டுள்ள வாழ்­வி­யல் மாற்­றங்­களை நமது வாழ்கை மாற்­றி­விட்­டது.

"குடும்­பங்­கள் எதிர்­கொள்­ளும் சவால்­கள், சுமக்­கும் பொறுப்­பு­கள் அதி­க­ரித்­துள்­ளன. சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, குழந்தை பரா­ம­ரிப்பு ஆகி­ய­வற்­றுக்­கான தேவை­களும் கூடி­யி­ருக்­கின்­றன.

"வாழ்­வா­தா­ரத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மும் ஏற்­பட்­டுள்­ளது.

"அதே சம­யத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்ட வேண்­டும். அப்­போ­து­தான் அவர்­க­ளால் புதிய வாழ்க்­கை­யைத் தொடங்க முடி­யும்.

"சிர­மப்­படும் குடும்­பங்­க­ளுக்கு உதவி செய்ய அனைத்து அர­சாங்க அமைப்­பு­கள், அர­சாங்க சார்­பற்ற அமைப்­பு­கள், தனி­யார் நிறு­வ­னங்­கள், தனி­ந­பர்­கள் ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும்," என்­றார் பிர­த­மர் முகை­தீன்.

தேசிய பொரு­ளி­யல் புத்­து­ணர்­வுத் திட்­டத்­தின்­கீழ் ஒற்­றைத் தாய்­மார்­க­ளுக்­கான சிறப்பு உதவி, உணர்­வு­பூர்வ ஆத­ரவு பெறு­வ­தற்­கான 159999 எனும் 24 மணி நேர தொலை­பேசி எண் போன்ற ஆத­ரவு வழங்­கப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"வாழ்க்­கைச் செல­வி­னங்­க­ளைக் குறைக்­க­வும் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­களும் குறைந்த வரு­மா­னம் ஈட்­டு­வோ­ரும் செய்­வ­த­றி­யாது தவிக்­கும் நிலை ஏற்­ப­டா­தி­ருக்­க­வும் அர­சாங்­கம் தொடர்ந்து முயற்­சி­களை மேற்­கொள்­ளும்," என்று திரு முகை­தீன் தெரி­வித்­தார்.