ப. பாலசுப்பிரமணியம்
தீபாவளி பண்டிகை காலத்தில் இங்குப் பணியாற்றுவோர், இந்தியாவுக்குத் திரும்பி குடும்பத்தார், உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடலாம் என்று எண்ணியிருப்பர். ஆனால் தற்போதைய கொவிட்-19 நிலவரம் அதற்கு இடம் கொடுப்பதாக இல்லை.
இருப்பினும், இங்கிருந்து பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில், வெஸ்டர்ன் யூனியன் ஏராளமான பரிசுகளை வழங்கத் தயாராக உள்ளது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை, பங்கெடுக்கும் பெரும்பாலான வெஸ்டர்ன் யூனியன் பணம் அனுப்பும் நிலையங்களிலிருந்து இந்தியாவின் வங்கி கணக்குகளுக்குப் பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு 'ஸ்கிரெச் கூப்பன்' (scratch coupon) வழங்கப்படும். அதை வருடி என்ன பரிசு கிடைத்திருக்கிறது என்பதை உடனடியாக அறிந்துகொள்ளலாம்.
இந்த கூப்பன் வழி உணவு, கடைத்தொகுதி பற்றுச்சீட்டுகள், பணப்பரிமாற்ற கட்டணத்தில் தள்ளுபடி ஆகிய சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
மொத்தம் 1,800 உணவு பற்றுச்சீட்டுகளையும் 400 கடைத்தொகுதி பற்றுச்சீட்டுகளையும் வெல்ல வாய்ப்புள்ளது. மேலும், 100% பணப்பரிமாற்ற கட்டணத் தள்ளுபடியை சுமார் 20,000 வாடிக்கையாளர்கள் பெறக்கூடும்.
இன்னும் 5,000 வாடிக்கையாளர்களுக்கு 50% பணப்பரிமாற்ற கட்டணத் தள்ளுபடி கிடைக்கும்.
இந்தத் தள்ளுபடிகளை அடுத்தாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை, இந்தியா வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புவதற்கு பயன்படுத்தலாம்.
அதுமட்டும் அல்லாமல் இப்பருவத்தில் பணப்பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் மாபெரும் அதிர்ஷ்ட குலுக்கிலும் இடம்பெறுவர்.
மின்னியல் முறையில் நடத்தப்படும் இந்த அதிர்ஷ்ட குலுக்கல் அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதிஅன்று நடக்கும். இதில் 50 அதிர்ஷ்டசாலிகளுக்கு $100 மதிப்புள்ள ரொக்கப் பரிசுகளும் காத்திருக்கின்றன.
வெஸ்டர்ன் யூனியன் இந்த ரொக்கப் பரிசு வெற்றியாளர்களை நேரடியாகத் தொலைபேசி வழி தொடர்புகொள்ளும்.
தீபாவளி தொடர்பில் வெஸ்டர்ன் யூனியனின் வாடிக்கையாளர் சலுகைகளைப் பற்றி மேலும் அறிய, https://www.westernunion.com/sg/en/india-promotion.html என்ற இணையப் பக்கத்திற்குச் செல்லலாம் அல்லது வெஸ்டர்ன் யூனியன் பணம் அனுப்பும் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று தகவல் பெற்றுக்கொள்ளலாம்.

