சலுகைகளை அள்ளித் தருகிறது 'குட்டே'

2 mins read
d06f4ded-643c-454b-a360-bf232dac6262
புருவத்தை அழகுபடுத்தும் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்கள். படம்: குட்டே -

தீபா­வ­ளி­யின்­போது கவர்ச்­சி­யு­டன் தோற்­ற­ம­ளிக்க விரும்­பும் தமது வாடிக்­கை­யா­ளர்­களை குட்டே (Gooday) அழகு நிலை­யம் மகிழ்­விக்க காத்­தி­ருக்­கிறது.

தற்­போது 'ஃபே‌‌ஷல்' சேவைக்­காக குட்டே அழகு நிலை­யத்­திற்கு நீங்­கள் வரு­வ­தாக இருந்­தால், உங்­க­ளுக்கு 25% கட்­டணக் கழிவு கிடைக்­கும். அப்­படி இன்­னொ­ரு­வ­ரை­யும் நீங்­கள் இச்­சே­வை பெறுவதற்­காக அழைத்து வந்­தால், இரு­வ­ருக்­குமே 35% கட்­டணக் கழிவு இருக்கும்.

குட்டே அழகு நிலைய உறுப்­பி­னர் அட்டை பெற ஆசையா? நேர­டி­யாக சிராங்­கூன் சாலை­யில் அமைந்­தி­ருக்­கும் நிலை­யத்­திற்கு வந்து அழகுச் சாத­னப் பொருட்­களை வாங்­கு­வோர் அல்­லது சேவை­யைப் பெறு­வோ­ருக்கு ஓராண்­டுக் கால உறுப்­பி­னர் அட்டை இல­வ­சம்.

முன்பு இதற்கு வாடிக்­கை­யா­ளர்­கள் $10 கட்­டணம் செலுத்த வேண்­டி­ய­தாக இருந்­தது.

இந்த அட்­டை­யு­டன் குட்டே பொருட்­க­ளுக்­கும் சேவை­க­ளுக்­கும் 10% கட்­டணக் கழிவு உண்டு.

இன்­னும் கூடு­தல் கட்­ட­ணம் செலுத்­தி­னால், வாழ்­நாள் உறுப்­பி­னர் அட்­டை­யை­யும் வாடிக்­கை­யா­ளர்­கள் பெற­லாம்.

வீட்­டில் குட்டே அழகுப் பொருட்­கள் தீர்ந்­து­விட்­டதே, நேர­டி­யாக சென்று வாங்க முடி­ய­வில்­லையே என்ற கவலை வேண்­டாம். நீங்­கள் https://www.lazada.sg/shop/gooday-shop/ என்ற இணை­யப் பக்­கத்­தில் உங்­க­ளுக்­குத் தேவை­யான பொருட்­களை வாங்­க­லாம். வீட்­டிற்கே அவை வந்து சேர்ந்­து­வி­டும்.

மேலும், 'லஸாடா' (Lazada) மின் வர்த்­த­கத் தளத்­தில் வரும் நவம்­பர் 11ஆம் தேதி­யன்று குட்டே பொருட்­களை வாங்­கி­னால், 20% கட்­டணத் தள்ளு­படியை வாடிக்­கை­யா­ளர்­கள் எதிர்­பார்க்­க­லாம்.

அந்­நா­ளில் கடைக்கு நேர­டி­யாக வரு­வோ­ரும் குட்டே அழகுப் பொருட்­க­ளுக்கு மட்­டும் அதே 20% கட்­டணத் தள்­ளு­ப­டியை அனு­ப­விக்­க­லாம்.

"கடை­யின் சுகா­தாரச் சூழ­லுக்கு நாங்­கள் எப்­போ­துமே அதிக முக்­கி­யத்­து­வம் கொடுத்­த­துண்டு. கொவிட்-19 கிரு­மித்­தொற்று சூழ­லி­லும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தொடர்ந்த ஆத­ரவு எங்­க­ளுக்கு உள்­ளது. ஏனெ­னில், சுகா­தா­ரத்தை நிலை­நாட்டி கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­களை முறை­யாக பின்­பற்றி வரு­கி­றோம். பண்­டிகை காலத்­தில் அதிக அள­வில் திரண்டு வரும் வாடிக்­கை­யா­ளர்­களை மகிழ்­விக்க காத்­தி­ருக்­கி­றோம்," என்று கூறி­னார் 'குட்டே' உரி­மை­யா­ளர் திரு பி.செல்­வ­ராஜூ.

குட்டே அழகு நிலை­யத்­தைப் பற்றி மேல் விவ­ரம் அறிய, https://www.gooday.com.sg/ இணை­யப் பக்­கத்­திற்கு செல்­ல­லாம்.

செய்தி: ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்