ப. பாலசுப்பிரமணியம்
கொவிட்-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வர, தீபாவளி பண்டிகைக்காக லிட்டில் இந்தியாவில் மக்கள் கூட்டம் திரும்பியுள்ளது.
பண்டிகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் மக்களை, சிராங்கூன் சாலையில் இரு கிளைகளைக் கொண்டுள்ள ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை, பற்பல சலுகைகளுடன் ஈர்க்கக் காத்திருக்கிறது.
"இத்தருணத்தில் தங்களுக்கும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் நகைகள் வாங்கிட வாடிக்கையாளர்கள் முன்வருவர் என்று நம்புகிறோம். வழக்கமாக தீபாவளி சமயம் அதிகமான விற்பனையை நாங்கள் எதிர்பார்ப்பதுண்டு. தற்போதைய சூழலில் தங்க முதலீடு செய்வது உகந்ததாகும்," என்று தெரிவித்தார் ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரான திரு ஜோய் ஆலுக்காஸ்.
தீபாவளியை முன்னிட்டு, ஜோய் ஆலுக்காஸ் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக $1,000க்கு வைரம் அல்லது பொல்கி நகைகளை வாங்கினால், அவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் இலவசம்.
அதோடு இம்மாதம் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, $1,000க்கு மேல் தங்க நகைகள் வாங்குவோருக்கு, 0.2 கிராம் தங்க நாணயமும் இலவசமாகக் கிடைக்கும். பழைய தங்க மாற்று சலுகையின் கீழ், பழைய தங்க நகைகளுக்குக் கழிவு இல்லை.
மேலும் முன்கூட்டியே 10% பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், சலுகை காலம் வரை தங்க விலைப் பாதுகாப்பு உத்தரவாதமும் பெறுவர்.
இது வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கும்போது எதிர்பாராத தங்க விலை உயர்விலிருந்து அவர்களைப் பாதுகாக்கும்.
'Happy Waali Deepavali' எனும் கருப்பொருள் கொண்ட ஜோய் ஆலுக்காஸின் இச்சிறப்பு தீபாவளிச் சலுகை விற்பனைத் திட்டம், வரும் 15ஆம் தேதி வரை நீடிக்கும்.

