'கள்ளக் குடியேறியின் மகள்': ஹாரிசைத் தவறுதலாக வருணித்த மலேசிய தொலைக்காட்சி மன்னிப்பு

1 mins read
8658425c-5235-4f79-abd9-71dd9c98eead
-

அமெரிக்காவின் அடுத்த துணை அதிபராக வரப்போகும் திருவாட்டி கமலா ஹாரிஸ், கள்ளக்குடியேறியின் மகள் என வருணித்ததற்காக மலேசிய தொலைக்காட்சி ஒளிவழியான 'டிவி3' மன்னிப்புக் கேட்டது.

பிற்பகல் 1.30 மணிக்கு ஒளியேறிய செய்தி நிகழ்ச்சியில் இந்தத் தவறு நேர்ந்தது. "ஜமைக்காவைச் சேர்ந்த திருவாட்டி ஹாரிசின் தந்தையும் இந்தியாவைச் சேர்ந்த அவரது தாயாரும் அமெரிக்காவிற்கு சட்டபூர்வமாக குடிபெயர்ந்தவர்களாவர். தவறுக்காக மன்னிப்பு கேட்கிறோம்," என்றது அந்த நிலையம்.