அன்வார் இப்ராகிம் எச்சரிக்கை:மாற்றம் செய்யாவிடில் ஆதரவு இல்லை

அன்வார் இப்ராகிம் எச்சரிக்கை:மாற்றம் செய்யாவிடில் ஆதரவு இல்லை

2 mins read
02be8eaa-50e8-4ab8-9f19-e658ddf8fa4e
படம்: ராய்ட்டர்ஸ் -

'வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றம் செய்யாவிடில் ஆதரிப்பது சந்தேகம்தான்'

கோலா­லம்­பூர்: மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் கடந்த வெள்­ளிக்­கிழமை தாக்­கல் செய்­யப்­பட்ட அடுத்த ஆண்­டிற்­கான வர­வு­செலவுத் திட்­டத்­தில் மாற்­றங்­களைச் செய்­யா­விடில் அதனை நிறை­வேற்ற தாங்­கள் ஆத­ர­வ­ளிக்­கா­மல் போக­லாம் என்று எதிர்க்­கட்சி­கள் எச்சரித்துள்ளன.

"வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை நிறை­வேற்ற நாங்­கள் ஆர்­வ­மாக இருக்­கி­றோம். அப்­ப­டிச் செய்­யா­தி­ருந்து பொது­மக்­களை, முன்­க­ளப் பணி­யா­ளர்­களை அல்­லது பொதுச் சேவை அதி­கா­ரி­க­ளைச் சிர­மத்­திற்கு உட்­ப­டுத்த நாங்­கள் விரும்­ப­வில்லை.

"ஆனால், வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் திருத்­தம் செய்­யா­விடில், அது எளி­தில் நிறை­வேற்­றப்­படும் என நினைத்­து­விட வேண்­டாம்," என்று எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் கெஅ­டி­லான் கட்­சித் தலை­வ­ரு­மான அன்­வார் இப்­ரா­கிம் நாடாளு­மன்­றத்­தில் நேற்று கூறி­னார்.

வங்­கிக் கட­னைத் திருப்­பிச் செலுத்­து­வ­தற்­கான கால நீட்­டிப்­புத் திட்­டத்தை மீண்­டும் அறி­முகப்­படுத்த வேண்­டும் என்­பது உள்­ளிட்ட பக்­கத்­தான் ஹரப்­பான் எதிர்க்­கட்­சிக் கூட்­ட­ணி­யின் ஆறு கோரிக்­கை­கள் குறித்து வர­வு­செலவுத் திட்ட அறிக்­கை­யில் எது­வும் இடம்­பெ­ற­வில்லை என்று திரு அன்வார் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தொற்று சார்ந்த பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிக்க நிதி­ அமைச்­சர் ஸஃப்ருல் அஸிஸ் எல்லாப் பரிந்­து­ரை­க­ளை­யும் ஆராய வேண்­டும் என்று திரு அன்வார் வலி­யு­றுத்­தி­ இருக்கிறார்.

நாடா­ளு­மன்­றத்­தில் வர­வு­செலவுத் திட்­டம் குறித்த விவா­தம் நேற்று தொடங்­கி­யது. ஓர் அமர்­வில் அதி­க­பட்­சம் 80 பேர் மட்­டுமே பங்­கேற்க முடி­யும். அத்­து­டன், காலை 10 மணி­யில் இருந்து பிற்­ப­கல் 2 மணி வரை என ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்­டுமே மன்­றம் கூடும் என முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

பிர­த­மர் முகை­தீன் யாசின் தலை­மை­யி­லான 'பெரிக்­கத்­தான் நேஷ­னல்' கூட்­டணி அர­சாங்­கம் தாக்­கல் செய்த முதல் வர­வு­செலவுத் திட்­டம் இது. மொத்­தம் 222 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட நாடா­ளு­மன்­றத்­தில் பிர­த­மர் முகை­தீ­னுக்கு 113 எம்.பி.க்களின் ஆத­ரவு மட்­டுமே இருக்கிறது.

இத­னால், எதிர்க்­கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் வர­வு­செ­ல­வுத் திட்­டம் நிறை­வேற்­றப்­படும் பட்­சத்­தில் திடீர் தேர்­த­லுக்­கான அபா­யத்­தைத் தவிர்க்­க­லாம் என அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

வர­வு­செ­ல­வுத் திட்­டம் மீதான வாக்­கெ­டுப்பு இம்­மா­தம் 25ஆம் தேதி இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­லை­யில், பெரிக்­கத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணி­யில் சேர்ந்து, அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றுள்ள அம்னோ கட்சி, வர­வு­செ­ல­வுத் திட்­டத்­திற்­கான தனது ஆத­ரவை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதற்­கி­டையே, முன்­னாள் பிர­தமர் மகா­தீர் முகம்­ம­து­வும் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் மாற்­றங்­கள் செய்­யப்­பட வேண்­டும் எனக் கோரிக்கை விடுத்­துள்­ளார்.