சக வீரர்கள் மூவரைச் சுட்டுக்கொன்ற ரஷ்யர்

சக வீரர்கள் மூவரைச் சுட்டுக்கொன்ற ரஷ்யர்

1 mins read
b9f6d356-fc52-4e96-b34b-b5e8bcfe4006
வொரோ­னெஸ் நக­ருக்கு அருகே உள்ள இரா­ணு­வத் தளத்­தில் நேற்று இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. படம்: ராய்ட்டர்ஸ் -

மாஸ்கோ: ரஷ்ய இரா­ணுவ வீரர் ஒரு­வர் தன்னுடன் பணி­பு­ரிந்த மூவ­ரைச் சுட்­டுக்கொன்றுவிட்டார். வொரோ­னெஸ் நக­ருக்கு அருகே உள்ள இரா­ணு­வத் தளத்­தில் நேற்று இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது அந்த இரா­ணுவ வீர­ருக்­கும் அதி­காரி ஒரு­வ­ருக்­கும் இடையே வாக்­கு­வா­தம் எழுந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. இத­னால் ஆத்­தி­ர­ம் அடைந்த அவ்­வீ­ரர், அந்த அதி­கா­ரி­யின் கைத்­துப்­பாக்­கி­யைப் பறித்து, மூவ­ரைச் சுட்­டுக்­கொன்­ற­தாக ரஷ்ய ஊட­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

இந்த வெறிச்­செ­ய­லில் ஈடு­பட்­ட­பின் அந்த வீரர் ஒரு கட்­ட­டத்­தி­னுள் இருந்­த­படி பூட்­டிக்­கொண்­ட­தால் இரா­ணு­வத் தள அதி­கா­ரி­கள் அவ­ரி­டம் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றனர்.

ரஷ்ய இரா­ணு­வத் தளங்­களில் துப்­பாக்­கிச்­சூடு இடம்­பெ­று­வது புதி­தில்லை எனக் கூறும் மனித உரி­மைக் குழுக்­கள், ஆனா­லும் அண்­மைக்­கா­ல­மாக அப்­போக்கு அதி­க­ரித்து வரு­வது குறித்து கவலை தெரி­வித்­தது.

2019 அக்­டோ­ப­ரில், சைபீ­ரிய இரா­ணு­வத் தளத்­தைச் சேர்ந்த ஒரு­வர் சக வீரர்­கள் எட்­டுப் பேரைச் சுட்­டுக்­கொன்றுவிட்டார்.