தைவானுக்கு அழைப்பில்லை; சீனாதான் காரணம் என குற்றச்சாட்டு

தைவானுக்கு அழைப்பில்லை; சீனாதான் காரணம் என குற்றச்சாட்டு

1 mins read
022da89c-ea5a-4c1a-a748-cf30beb6ffd9
-

உல­கச் சுகா­தார நிறு­வனம் இவ்­வார இறு­தி­யில் மெய்­நி­கர் முறை­யில் முக்­கி­ய­மா­ன­தொரு கூட்­டத்­திற்கு ஏற்­பாடு செய்­துள்­ளது. கொவிட்-19 நோய்ப் பர­வல் அக்­கூட்­டத்­தின் மைய அம்­ச­மாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த நிலை­யில், அக்கூட்­டத்­தில் பங்­கேற்­கும்­படி தைவா­னுக்கு இன்­னும் அழைப்பு வர­வில்லை. இது குறித்து மனக்­குறை தெரி­வித்­துள்ள தைவான், சீனா­வின் குறுக்­கீ­டு­தான் இதற்­குக் கார­ணம் எனக் குற்­றம் சாட்­டி­யி­ருக்­கிறது.

"உல­கச் சுகா­தார நிறு­வ­னக் கூட்­டங்­களில் பங்­கேற்க முடி­யா­த­படி சீனா தடுத்து வரு­வ­தற்கு வருத்­தத்­தை­யும் அதி­ருப்­தி­யை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம். 23.5 மில்­லி­யன் தைவா­னி­யர்­க­ளின் சுகா­தா­ரத்­தை­யும் மனித உரி­மை­களை­யும் உல­கச் சுகா­தார நிறு­வ­ன­ம் தொடர்ந்து புறக்­க­ணித்து வரு­கிறது," என்று தைவான் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இப்­படி அர­சி­யல் கார­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில் தைவா­னுக்கு அழைப்பு விடுக்க உலக நிறு­வனம் மறுத்து வரு­வது, 'அனை­வ­ருக்­கும் சுகா­தா­ரம்' என்ற அதன் கோரிக்­கையை கேலிக்­கு­ரி­ய­தாக்­கும் வித­மாக இருக்­கிறது என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

ஆனால், தைவா­னுக்கு அழைப்பு விடுப்­பது என்­பது சக உறுப்பு நாடு­கள் சேர்ந்து எடுக்க வேண்­டிய முடிவு என்று உலக நிறு­வ­னம் விளக்­க­ம­ளித்துள்ளது. கொவிட்-19 தொற்றை விரைந்து கட்­டுப்­ப­டுத்­தி­ய­மைக்­காக தைவா­னைப் பல நாடு­களும் பாராட்டி வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.