சிலாங்கூர் மாநிலத்தின் பிரதான நதி ஒன்று மாசடைந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, நான்கு தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சிலாங்கூர் மாநிலத்திலும் தலைநகர் கோலாலம்பூரிலும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் நேற்று தண்ணீர் இன்றி அவதியுள்ளனர்.
இன்று மாலை 6 மணியிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்படாது என்று சிலாங்கூர் பொது பயனீட்டுக் கழகம் அறிவித்தது.
நதி நீர் மாசடைந்திருப்பது தெரிய வந்ததும் நான்கு தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளையும் மூட அது உத்தரவிட்டது.

