நஜிப்: நிபந்தனைக்கு உட்பட்டால்தான் ஆதரவு

நஜிப்: நிபந்தனைக்கு உட்பட்டால்தான் ஆதரவு

2 mins read
14e71325-547a-4487-b19d-1d83f3efe804
படம்: ராய்ட்டர்ஸ் -

மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசி­னின் பெரிக்­காத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணி­யில் அம்னோ தலை­மை­யி­லான தேசிய முன்­ன­ணி­யும் இடம்­பெற்­றுள்­ளது. சொல்­லப்போனால் தேசிய முன்­ன­ணி­யின் ஆத­ரவு இல்­லா­வி­டில் திரு முகை­தீ­னின் ஆட்சி கவிழ்ந்து

விடும்.

இந்­நி­லை­யில், அண்­மை­யில் தாக்­கல் செய்­யப்­பட்ட அடுத்த ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­விக்க வேண்­டு­மென்­றால் தனது நிபந்

தனை­க­ளுக்­குப் பிர­த­மர் முகை­தீன் உட்­பட வேண்­டும் என்று தேசிய முன்­னணி ஒரு போடு போட்­டுள்­ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை கடன் அடைப்­பைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்க அர­சாங்­கம் அனு­மதி தந்­தால்­தான் தேசிய முன்­ன­ணி­யின் 42 நாடாளு மன்ற உறுப்­பி­னர்­களும் அடுத்த ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­விப்­பர் என்று அம்­னோ­வைச் சேர்ந்த பெக்­கான் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நஜிப் ரசாக் கூறி­னார்.

மலே­சி­யர்­கள் தங்­கள் ஊழி­யர் சேம­நி­தி­யி­லி­ருந்து 10,000 ரிங்­கிட்டை வெளியே எடுக்க அர­சாங்­கம் அனு­ம­திக்க வேண்­டும் என்று தனது இரண்­டா­வது நிபந்­தனை யையும் தேசிய முன்­னணி முன்­வைத்­துள்­ளது.

"'நாங்­கள் முன்­வைக்­கும் இரண்டு நிபந்­த­னை­க­ளுக்கும்

அர­சாங்­கம் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே எனது கூட்­ட­ணி­யைச் சேர்ந்த நண்­பர்­களும் அடுத்த ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை ஆத­ரிப்­போம்.

"நிபந்­த­னை­யு­ட­னான ஆத­ரவை நாங்­கள் தெரி­விக்­கி­றோம்," என்று தேசிய முன்­ன­ணி ­நா­டா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மன்­றத்­தின் புதிய தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட திரு நஜிப் கூறி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் வர­வு­

செ­லவுத் திட்­டம் குறித்து விவா­தம் நடை­பெற்­ற­போது இது­கு­றித்து ஒரு மணி நேரத்­துக்­குத் திரு நஜிப் பேசி­னார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முன்­வைக்­கும் கருத்­து­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து அதன்­படி நட­வ­டிக்கை எடுக்­கா­விட்­டால் அடுத்த ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்­துக்கு எதிர்க்­

கட்­சி­கள் ஆத­ரவு தெரி­விக்­காது என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­கிம் நேற்று முன்­தி­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

மூன்று எதிர்க்­கட்­சி­க­ளைக் கொண்ட பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணிக்கு 91 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர்.