டிரம்ப் முகாம்: சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் தொடங்கிவிட்டோம்

டிரம்ப் முகாம்: சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் தொடங்கிவிட்டோம்

2 mins read
bded5104-8e04-4bab-886a-fe7297f63779
படம்: ஏஎஃப்பி -

அமெ­ரிக்­கத் தேர்­தல் இன்­னும் முடி­ய­வில்லை என்று திரு டோனல்ட் டிரம்ப்­பின் தரப்பு கூறு­கிறது. தேர்­த­லில் முறை­கே­டு­கள் நடந்­தி­ருப்­ப­தா­க­வும் அது குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

இதன் கார­ண­மாக சட்­ட­ரீ­தி­யாக நட­வ­டிக்கை எடுக்க திரு டிரம்ப்­புக்கு எல்லா உரி­மை­களும் இருப்­ப­தாக வெள்ளை மாளிகை செய்­தித் தொடர்­பா­ளர் கேலி மெக்­எ­னேனி தெரி­வித்­தார்.

சட்ட ரீதி­யான போராட்­டம் தொடங்­கி­விட்­ட­தா­க­வும் இப்­போ­து­தான் நேர்­மை­யான, உண்­மை­யான வாக்கு எண்­ணிக்­கை­யைப் பெறு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

தேர்­த­லில் மோசடி நிகழ்ந்­தி­ருப்­ப­தாக அவர் அடுக்­க­டுக்­கா­கக் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளார். ஆனால் தேர்­தல் முடி­வைப் பாதிக்­கக்­கூ­டிய நட­வ­டிக்கை நிகழ்ந்­தி­ருப்­ப­தற்­கான ஆதா­ரங்­கள் ஏதும் இல்லை என்று அர­சி­யல் நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், பெரும்­பா­லான இடங்­களில் திரு ஜோ பைடன் வெற்றி பெற்­று­விட்­ட­தாக கூறப்ப­டு­கிறது. ஆனால் தேர்­த­லின் முடிவு குறித்து அதி­கா­ர­பூர்­வ­மாக இன்­னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

குடி­ய­ர­சுக் கட்சி சார்­பா­கப் போட்­டி­யிட்ட திரு டிரம்ப் தோல்­வியை ஒப்­புக்­கொள்­ள­வில்லை.

தேர்­தல் முடிவு ஏற்க முடி­யாத ஒன்று என்­றும் தமக்கு எதி­ராக மோசடி நிகழ்ந்­தி­ருக்­கிறது என்­றும் திரு டிரம்ப் நேற்று முன்­தி­னம் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

தேர்­தல் முடிவு குறித்து திரு டிரம்ப் அதி­ருப்தி அடைந்­துள்­ள­போ­தி­லும் வரும் ஜன­வரி மாதத்­தில் அவர் வெள்ளை மாளி­கை­யை­விட்டு வெளி­யே­று­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அமெ­ரிக்க ஊட­கம் தெரி­வித்­தது.

2024ஆம் ஆண்­டில் நடை­பெற இருக்­கும் அதி­பர் தேர்­த­லில் மீண்­டும் போட்­டி­யி­டப் போவ­தாக திரு டிரம்ப் கூறி­யி­ருப்­ப­தாக செய்­தி­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, குடி­ய­ர­சுக் கட்­சி­யைத் தமது கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க தலை­மைத்­துவ அர­சி­யல் நட­வ­டிக்­கைக் குழு எனும் நிதி­ தி­ரட்­டும் அமைப்பு ஒன்றை திரு டிரம்ப் தொடங்­கி­யுள்­ளார்.

ஆண்­டுக்கு ஒரு­முறை நன்­கொ­டை­யா­ளர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து 5,000 அமெ­ரிக்க டாலர் வரை நன்­கொடை பெற முடி­யும். ஆனால் நன்­கொ­டை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கைக்கு வரம்­பில்லை.

மேலும், மற்ற அர­சி­யல் நட­வ­டிக்கை குழுக்­க­ளி­ட­மி­ருந்­தும் நன்­கொடை பெற­லாம்.

இது ஒருபுறம் இருக்க, தேர்தலில் தமது வெற்றியை அடையாளம் காண தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதை எதிர்த்து வழக்கு தொடுக்க பைடன் முகாம் பரிசீலனை செய்து வருகிறது.