எல்லையைத் திறப்பது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலனை

எல்லையைத் திறப்பது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலனை

1 mins read
032516ec-a558-4c2b-bed7-05d81ba076c7
படம்: இபிஏ -

ஆசிய நாடு­க­ளுக்­குத் தனது எல்­லை­க­ளைத் திறந்­துவி­டு­வது குறித்து ஆஸ்­தி­ரே­லியா பரி­சீ­லனை செய்து வரு­கிறது.

சீனா­வின் சில பகு­தி­களும் இவற்­றில் அடங்­கும் என்றுஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் நேற்று தெரி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளி­யலை மீண்­டும் உயிர்ப்­பிக்க ஆஸ்­தி­ரே­லியா தனது எல்­லை­க­ளைத் திறந்­து­விடத் திட்­ட­மிட்­டுள்­ளது.

கடந்த மார்ச் மாதத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்குச் செல்ல வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் தடை விதிக்­கப்­பட்­டது. ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்குச் செல்ல நியூ­சி­லாந்து நாட்­ட­வர்­

க­ளுக்கு மட்­டும் கடந்த மாதம் அனு­மதி வழங்­கப்­பட்­டது. தொடர்ந்து மூன்று நாட்களாக ஆஸ்திரேலியாவில் சமூக அளவில் கொவிட்-19 பாதிப்பு இல்லை.