பெட்டாலிங் ஜெயா: சிலாங்கூரில் நீர் மாசடைந்து அதனால் நீர் சுத்தி கரிப்பு நிலையம் மூடப்பட்ட விவகாரத்தில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
"நீர் மாசடைந்த விவகாரம் தொடர்பில் நள்ளிரவு முதல் இன்று காலை வரை போலிசார் மேற்கொண்ட சோதனையில் நால்வரும் கைதாகினர்," என்று சிலாங்கூர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் மூத்த துணை ஆணையர் ஃபட்சில் அஹமட் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கொம்பாக், தாமன்சாரா, கிளானா ஜெயா ஆகிய வட்டாரங்களில் நால்வரும் பிடிபட்டனர் என்றும் அவர் கூறினர்.
நால்வரும் 33 முதல் 43 வயது வரையில் உள்ளவர்கள்.
"33 வயது பங்ளாதேஷ் ஊழியரும் உள்ளூர்க்காரர் ஒருவரும் வாடகையிடத்தில் ரசாயனக் கழிவுகளை சேகரித்து வைத்திருந்தனர். அங்கிருந்து கழிவுநீர் குழாயில் ரசாயனக் கழிவு கொட்டப்பட்டதால் அது கால்வாய் வழியாக நீரில் கலந்து மாசு ஏற்பட்டது," என்று திரு ஃபட்சில் விளக்கினார்.
இதற்கிடையே உரிமம் இல்லாமல் வாடகை இடத்தில் ரசாயனக் கழிவு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
ரவாங் தாமான் வெலோக்சில் உள்ள அந்த இடத்தை சிலாங்கூர் மாநிலம் மற்றும் பொதுப் போக்கு வரத்து அதிகாரிகள் சோதனையிட் டனர்.
அப்போது பல்வேறு பீப்பாய்களில் ரசாயனக் கழிவு சேகரித்து வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு பீப்பாயிலும் ஆயிரம் லிட்டர் திரவத்தை நிரப்ப முடியும்.
நீர் மாசடைந்த சம்பவத்துக்குப் பிறகு பீப்பாய்களில் இருந்த ரசா யனக் கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன.

