குழந்தைகளைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய கும்பலை ஆஸ்திரேலிய போலிசார் முறியடித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு 46 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பாலர் பராமரிப்பு ஊழியரும் காற்பந்து பயிற்றுவிப்பாளரும் அடங்குவர்.
நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லாந்து, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா ஆகிய வட்டாரங்களில் 16 மாதம் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளைக் குறி வைத்து கும்பல் செயல்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல்களைச் செய்து படம்பிடித்து இணையம் வழியாக வெளியிட்டு அவர்கள் வருமானம் ஈட்டினர்.
அமெரிக்காவில் மூவர் கைது செய்யப்பட்டனர். ஐரோப்பா, ஆசியா, கனடா, நியூசிலாந்து ஆகிய இடங்களில் மற்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று போலிசார் கூறினர்.
பதினான்கு சந்தேக நபர்கள் மொத்தம் 828 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
சந்தேக நபர்களில் முக்கியமான ஒருவர், நியூ சவுத் வேல்சில் உள்ள பாலர் பராமரிப்பு நிலையத்தில் பணி யாற்றி வந்தார். அவரது பொறுப்பில் 30 குழந்தைகள் இருந்ததாக போலி சார் கூறினர்.
அந்த 27 வயது ஆடவர் 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டு களை எதிர்நோக்குகிறார். இதில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றங்களும் அடங்கும். அவரது கூட்டாளியும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கு கிறார். பராமரிப்பு நிலையத்தில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் ளுக்கு சம்பவம் குறித்து விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் போலிசார் குறிப்பிட்டனர்.