400 குடியிருப்பாளர்களை வலைவீசி தேடிவரும் மலேசிய அதிகாரிகள்

400 குடியிருப்பாளர்களை வலைவீசி தேடிவரும் மலேசிய அதிகாரிகள்

2 mins read
06d67a50-0f3f-48ee-b851-ff1556965944
கொரோனா கிருமி பர­வா­மல் இருக்க மிகக் கடு­மை­யான முடக்­க­நி­லையை மலே­சியா நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு முன்பு கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்­துக்கு அரு­கில் உள்ள வட்­டா­ரத்­தி­லி­ருந்து தப்பி ஓடிய 400 குடி­யி­ருப்­பா­ளர்­களை அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தேடி வரு­கின்­ற­னர். படம்: ராய்ட்டர்ஸ் -

கொரோனா கிருமி பர­வா­மல் இருக்க மிகக் கடு­மை­யான முடக்­க­நி­லையை மலே­சியா நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு முன்பு கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்­துக்கு அரு­கில் உள்ள வட்­டா­ரத்­தி­லி­ருந்து தப்பி ஓடிய 400 குடி­யி­ருப்­பா­ளர்­களை அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தேடி வரு­கின்­ற­னர்.

சிலாங்­கூர் மாநி­லம், செபாங் மாவட்­டத்­தில் உள்ள சலாக் திங்­கி­யில் உள்ள மேடான் 88 குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தின் நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு மேலும் கடு­மை­யாக்­கப்­படும் என்று பல நாட்­க­ளுக்கு முன்பு அதி­கா­ரி­கள் அறி­வித்­த­னர்.

அதன்­படி அந்­தக் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தை­விட்டு யாரும் வெளி­யேற முடி­யா­த­ப­டி­யும் பிறர் அங்கு செல்­வ­தைத் தடுக்­க­வும் அவ்­வட்­டா­ரத்­தைச் சுற்றி முள் வேலி போடப்­பட்­டுள்­ளது. அதை­ய­டுத்து, ஒவ்­வொரு குடி­யி­ருப்­பா­ள­ருக்­கும் கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­படும். குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு உண­வுப் பொட்­ட­லங்­க­ளை­யும் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளை­யும் அதி­கா­ரி­கள் அனுப்பி வைக்­கின்­ற­னர்.

ஆனால் முடக்­க­நி­லைக்கு முன்­பாக மேடான் 88 வட்­டா­ரத்­தில் வசித்த நூற்­றுக்­க­ணக்­கான ஊழி­யர்­களை அவர்­க­ளது முத­லா­ளி­கள் பேருந்­து­களில் ஏற்றி அங்­கி­ருந்து வெளி­யேற்­றி­விட்­ட­தாக மலே­சிய மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­தார்.

தப்பி ஓடி­யோ­டிய ஊழி­யர்­களை போலி­சார் தேடி வரு­வ­தா­க­வும் அவர்­கள் கூடிய விரை­வில் கைது செய்­யப்­ப­டு­வர் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

"மேடான் 88 வட்­டா­ரத்­தி­லி­ருந்து தங்­கள் ஊழி­யர்­கள் வெளி­யேற அவர்­க­ளது முத­லா­ளி­கள் பேருந்­து­களை அனுப்­பி­வைத்­த­தாக எனக்­குத் தக­வல் கிடைத்­தது. எனவே, முத­லா­ளி­கள் மூலம் ஊழி­யர்­க­ளின் இருப்­பி­டத்­தைத் தெரிந்­து­கொள்­ள­லாம்," என்று திரு இஸ்­மா­யில் சப்ரி தெரி­வித்­த­தாக மலே­சிய ஊட­கம் தெரி­வித்­தது.

"தப்பி ஓடிய ஊழி­யர்­க­ளுக்கு எதி­ராக மட்­டு­மின்றி அவர்­கள் தப்பி ஓட உத­விய அவர்­க­ளது முத­லா­ளி­க­ளுக்கு எதி­ரா­க­வும் நட­வ­டிக்கை எடுக்க தேசிய பாது­காப்பு மன்­றம் முடி­வெ­டுத்­துள்­ளது. அவர்­கள் அதி­கா­ரி­க­ளுக்­குப் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர். மேலும், பல உயிர்­க­ளுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர்," என்­றார் திரு இஸ்­மா­யில் சப்ரி.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நில­வ­ரப்­படி கடந்த 14 நாட்­களில் மேடான் 88 வட்­டா­ரத்­தில் 40 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

அந்த வட்­டா­ரத்­தில் இன்­னும் ஒரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் அது சிவப்பு மண்­ட­ல­மாக அறி­விக்­கப்­படும் என்று மலே­சிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தற்­போது சிலாங்­கூர் மாநி­லத்­தின் மற்ற பகு­தி­களில் நிபந்­த­னை­யு­ட­னான நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு நடப்­பில் உள்­ளது. இதன்­படி, அங்­கி­ருப்­ப­வர்­கள் பிற மாநி­லங்­க­ளுக்­குப் பய­ணம் செய்­யக்­

கூ­டாது. பிர­தான சாலை­களில் போலி­சார் தடுப்­பு­களை அமைத்­துள்­ள­னர். மேலும் பலர் ஒன்று கூடு­வ­தற்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு நடப்­பில் உள்ள இடங்­களில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் 14 நாட்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர். அவர்­கள் வெளியே செல்ல முடி­யாது. நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட இடங்­களில் வேலை, வரு­மான இழப்பு குறித்து குடி­யி­ருப்­பா­ளர்­கள் கவலை தெரி­வித்­த­னர்.

குறிப்புச் சொற்கள்