பைடனின் இடைக்கால அரசை ஏற்க மறுக்கும் டிரம்ப்

2 mins read
d3b2065c-58e0-4dc9-b99b-93d17aef3f4b
-

வாஷிங்­டன்: அண்­மை­யில் நடந்து முடிந்த அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லில் பெரும்­பா­லான மாநி­லங்­களில் ஜன­நா­ய­கக் கட்சி வேட்­பா­ளர் ஜோ பைடன் வெற்றி பெற்­றுள்­ளார். அரி­சோனா மாநி­லத்­தை­யும் அவர் கைப்­பற்­றி­யுள்­ள­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

ஆனால் தேர்­த­லில் மோசடி நடந்­துள்­ளது என்று அதி­பர் டோன­ல்ட் டிரம்ப் குற்­றம் சாட்­டி­யுள்­ளார். இதை­ய­டுத்து, தேர்­தல் வெற்­றி­யா­ளர் தொடர்­பாக அதி­கா­ர­பூர்­வ­மாக இன்­னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், திரு பைடன் தலை­மை­யி­லான இடைக்­கால அரசை ஏற்க டிரம்ப் மறுத்­து­விட்­டார்.

திரு பைட­னின் இடைக்­கால அரசு அர­சாங்க அலு­வ­ல­கங்­க­ளுக்­குச் செல்­ல­வும் அர­சுப் பணி­க­ளைக் கவ­னிக்­க­வும் திரு டிரம்ப் அனு­ம­திக்­க­வில்லை. பல நாட்­க­ளாக அர­சுப் பணி­கள் கவ­னிக்­கப்­ப­டா­த­தால் நாட்­டின் பாது­காப்­புக்­கும் நல­னுக்­கும் ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டும் என்று குரல்­கள் எழுந்­துள்­ளன. இந்த விவ­கா­ரத்­தில் அதி­பர் டிரம்ப்­பின் குடி­ய­ர­சுக் கட்­சி­யி­னர் சில­ரும் அவ­ருக்கு எதி­ரான நிலைப்­பாட்­டைக் கொண்­டுள்­ள­னர்.

குறைந்­த­பட்­ச­மாக நாட்டு நடப்பு, உள­வுத்­து­றைத் தக­வல்­கள் ஆகி­யவை பற்றி திரு பைட­னுக்கு அன்­றா­டம் தெரி­விக்க வேண்­டும் என்று குடி­ய­ர­சுக் கட்­சி­யைச் சேர்ந்த பல சென­டர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.

அப்­போ­து­தான் பயங்­க­ர­வா­தம், இணைய ஊடு­ரு­வல் போன்ற ஆபத்­து­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க முடி­யும் என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

"திரு பைட­னின் குழு­வி­டம் எல்­லா­வற்­றை­யும் தெரி­விக்­கத் தேவை­யில்லை. சில முக்­கிய தக­வல்­களை அவர்­க­ளுக்குத் தெரி­விக்க வேண்­டும். அவற்­றில் தேசிய பாது­காப்­பும் ஒன்று," என்று மிசூ­ரி­யின் சென­ட­ரும் குடி­ய­ர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரு­மான திரு ரோய் பிளண்ட் கூறி­னார். இதற்­கி­டையே, சீன ராணுவத்­துக்­குச் சொந்­த­மான அல்­லது கட்­டுப்­பாட்­டில் உள்ள நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்ய அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளுக்கு அதி­ப­ர் டிரம்ப் தடை விதித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் இது­தொ­டர்­பாக சிறப்பு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இந்த உத்­த­ரவு சீனா­வின் சில பெரிய நிறு­வ­னங்­க­ளைப் பாதிக்­கக்­கூ­டும் என்று ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. இந்­தப் புதிய விதி­முறை வரும் ஜன­வரி மாதம் 11ஆம் தேதி­யி­லி­ருந்து நடப்­புக்கு வரு­கிறது.

சீனா­வின் ராணு­வத்­துக்­குச் சொந்­த­மான நிறு­வ­னம் என்று அறி­விக்­கப்­பட்டு 60 நாட்­க­ளா­ன­தும் அந்த நிறு­வ­னத்­தின் பங்­கு­களை அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள் வாங்­கவோ விற்­கவோ முடி­யாது.

"சீனா அதன் ராணு­வத்தை மேம்­ப­டுத்­த­வும் நவீ­னப்­ப­டுத்­த­வும் அமெ­ரிக்­கா­வின் நிதி­யைத் தவ­றான முறை­யில் பயன்­ப­டுத்­து­கிறது," என்று வெள்ளை மாளிகை தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கத் தேர்­த­லில் பெரும்­பான்மை இடங்­க­ளைக் கைப்­பற்­றிய திரு பைட­னுக்கு போப்­பாண்­ட­வர் தொலை­பேசி அழைப்பு மூலம் வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.