தடைகளை உடைக்கும் பைடன்: பென்டகன் தலைவராக பெண் ஒருவரை நியமிக்கவுள்ளார்

1 mins read
d746d14c-db5d-4018-9d94-0872e152e168
-

வாஷிங்டன்: பென்டகனிற்கான தலைவராக பெண்ணொருவரை நியமிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை அமெரிக்க ஜோ பைடன் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னர் பென்டகனில் பணியாற்றியவரும் அரசியல் ரீதியில் மிதவாத கொள்கையைப் பின்பற்றுபவருமான மிட்செல் புளோர்னோயை (படம்) பைடன் பென்டகனின் தலைவராக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

59 வயதான மிட்செல் அனைத்துலக அளவில் வலுவான ராணுவ ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த ஓர் ஆண்டு காலமாக இவர் அமெரிக்காவின் வெளி விவகார பாதுகாப்பு கொள்கைகள் குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிரம்ப்பின் பதவிக்காலத்தில் பென்டகனின் தலைமை பதவியை ஐவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

பென்டகனின் தலைமை பதவிக்குப் பெண்ணொருவரை நியமிக்க ஜனநாயக கட்சி நீண்ட காலமாக விருப்பம் கொண்டுள்ளது.